Tuesday, July 14, 2009

ஓமென் றொலிக்கும் ஔஷதம் நீயே !



ஓமென் றொலிக்கும் ஔஷதம் நீயே
ஆமென் றருளும் அன்னையும் நீயே

வாஎன் றதும்உடன் வருபவள் நீயே
தாஎன் றதும்வரம் தருபவள் நீயே

சத்தியம் காக்கும் உத்தமி நீயே
பக்தரைக் காக்கும் சக்தியும் நீயே

வித்தகர் போற்றும் நித்திலம் நீயே
சித்தரும் போற்றும் சித்திரம் நீயே

கற்றவர் போற்றும் பெட்டகம் நீயே
மற்றவர் போற்றும் மாமணி நீயே

கற்பனைக் கெட்டா கற்பகம் நீயே
பொற்பதம் பற்ற புகல்தரு வாயே!


--கவிநயா

16 comments:

  1. கற்பனைக் கெட்டா கற்பகம் நீயே - இந்த
    அற்பனுக்கு எட்டிடும் அன்னையும் நீயே!

    அருமையாச் சந்தமா வந்திருக்கு-க்கா!

    ReplyDelete
  2. முன்னையும் நீயே! பின்னையும் நீயே!
    இன்னையும் நீயே! நன்னயம் நீயே!
    என்னையும் நீயே! உன்னையும் நீயே!
    என்னையும் பெற்ற என் அன்னையும் நீயே!

    ReplyDelete
  3. //ஔஷதம்//

    ஔஷதம்-ன்னா என்னக்கா? :)

    ReplyDelete
  4. நீங்களும் சந்தமா பாடி கலக்கியிருக்கீங்க கண்ணா. நன்றி :)

    //ஔஷதம்-ன்னா என்னக்கா? :)//

    அறியாதவர் மாதிரி அறிவினா கேட்பதில் மன்னராச்சே :) இருந்தாலும் சொல்றேன் - எனக்கு தெரிஞ்ச வரை ஔஷதம்னா மருந்துன்னு பொருள். சரிதானா? :)

    ReplyDelete
  5. மணியும் மந்திரம் தன்னொடு அவுடதம் ஆனவள் நீயே
    பிணிஎதும் அண்டாமல் காப்பவள் நீயே !
    கண்ணுள் மணி நீ! சொல்லுள் பொருள் நீ!
    கவிதைப் பொருளாய்த் தமிழும் தந்தாய்!

    அன்னையும் நீயே! அண்மையும் நீயே
    நன்மையும் நீயே! அன்மையும் நீயே!
    என்னையும் உன் மயமாக்குவள் நீயே
    தன்னையும் அறிந்திடத் தருபவள் நீயே!

    ReplyDelete
  6. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete
  7. வாங்க திரு.கிருஷ்ணமூர்த்தி. கவிதைக்கு கவிதை வழக்கம் போல எழுதி அசத்திட்டீங்க!

    //என்னையும் உன் மயமாக்குவள் நீயே
    தன்னையும் அறிந்திடத் தருபவள் நீயே!//

    எனக்கு பிடிச்ச வரிகள்.

    "அன்மை"ன்னா என்ன?

    (மிகவும் தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும். ஆணி ரொம்ப அதிகமாயிடுச்சு)

    ReplyDelete
  8. அன்மை ன்பது அல்லாததைக் குறிக்கும். நன்மை என்று சொல்லும் போதே நன்மை அல்லாதது என்ற பாகுபாடும் வந்து விடுகிறது. அதுவாகவும் இருப்பவள் என்ற பொருளிலேயே, அங்கே அந்தப் பிரயோகம்.

    'தீது நன்மையெல்லாம் நின்றன் செயல்களன்றி இல்லை' பாரதியின் காளிபாட்டு.

    ReplyDelete
  9. /ஓமென் றொலிக்கும் ஔஷதம் நீயே
    ஆமென் றருளும் அன்னையும் நீயே

    வாஎன் றதும்உடன் வருபவள் நீயே
    தாஎன் றதும்வரம் தருபவள் நீயே

    சத்தியம் காக்கும் உத்தமி நீயே
    பக்தரைக் காக்கும் சக்தியும் நீயே

    வித்தகர் போற்றும் நித்திலம் நீயே
    சித்தரும் போற்றும் சித்திரம் நீயே

    கற்றவர் போற்றும் பெட்டகம் நீயே
    மற்றவர் போற்றும் மாமணி நீயே

    கற்பனைக் கெட்டா கற்பகம் நீயே
    பொற்பதம் பற்ற புகல்தரு வாயே!/

    /மணியும் மந்திரம் தன்னொடு அவுடதம் ஆனவள் நீயே
    பிணிஎதும் அண்டாமல் காப்பவள் நீயே !
    கண்ணுள் மணி நீ! சொல்லுள் பொருள் நீ!
    கவிதைப் பொருளாய்த் தமிழும் தந்தாய்!

    அன்னையும் நீயே! அண்மையும் நீயே
    நன்மையும் நீயே! அன்மையும் நீயே!
    என்னையும் உன் மயமாக்குவள் நீயே
    தன்னையும் அறிந்திடத் தருபவள் நீயே!/

    இரண்டும் அருமை

    ReplyDelete
  10. //நன்மை என்று சொல்லும் போதே நன்மை அல்லாதது என்ற பாகுபாடும் வந்து விடுகிறது. அதுவாகவும் இருப்பவள் என்ற பொருளிலேயே, அங்கே அந்தப் பிரயோகம்.//

    விளக்கத்திற்கு மிக்க நன்றி திரு. கிருஷ்ணமூர்த்தி.

    ReplyDelete
  11. //இரண்டும் அருமை//

    வருகைக்கு மிக்க நன்றி திகழ்மிளிர்.

    ReplyDelete
  12. Another very beautiful song !
    Simple and beautiful !!

    ReplyDelete
  13. மிகவும் அருமையாக இருக்கிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  14. //Another very beautiful song !
    Simple and beautiful !!//

    மிக்க நன்றிங்க ராதா!

    ReplyDelete
  15. //மிகவும் அருமையாக இருக்கிறது. மிக்க நன்றி.//

    முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றிங்க இராதாகிருஷ்ணன்!

    ReplyDelete