Monday, November 30, 2009

சூரியனே, என் கிழக்கில் உதிக்கப் போறதெப்போ?

வடிவான ஒன் அழக மனசில் வடிச்சு வச்சேன் - நீ
பரிவா ஒரு வார்த்த பேசக் காத்துக்கிட்டு கெடக்கேன்

சூரியன் நீ எங் கெழக்கில் உதிக்கப் போறதெப்போ - எஞ்
சூரியனப் பாத்தெம் மனசு மலரப் போறதெப்போ?

காரிகையே ஒங் கருண கெடைக்கப் போறதெப்போ - நா
பகலிரவு பாராம பொலம்புறனே தப்போ?

பேரிகையா மொழங்கினாலும் கேக்கலையோ ஒனக்கு - நா
படற பாட்டப் பாத்தும் தீரலையோ பிணக்கு?

காடு பாக்கப் போகும் முன்னே வீடு பாக்க வேணும் - ஒன்
வீட்டுக்குள்ள என்னையும் நீ சேத்துக்கிட வேணும்

ஆயிரந்தான் அறிவிலியா இருந்தபோதும் நானும் - ஒம்
பிள்ளைகளில் ஒருத்திதானே நெனச்சுப் பாரு நீயும்


--கவிநயா

2 comments:

  1. கண்ணதாசனின் பாட்டுத் தான் நினைவுக்கு வருகிறது!

    கொடியசைந்ததும் காற்று வந்ததா
    காற்று வந்ததும் கொடியசைந்ததா?

    இது வரணும்னா அது வேணும்-அதுவரனும்னா இது வேணும்னா கணக்கா.....

    மனசும் மலரப் பாத்துச் சூரியனும்
    உதிக்கும் திசை அதுதானே கிழக்கு!

    ReplyDelete
  2. //இது வரணும்னா அது வேணும்-அதுவரனும்னா இது வேணும்னா கணக்கா.....//

    நல்லா சொன்னீங்க கிருஷ்ணமூர்த்தி சார். சும்மாவே எனக்கு ஒண்ணும் புரியாத எனக்கு, சுத்தமா புரியாத விஷயம் :()

    வருகைக்கு மிக்க நன்றி சார்!

    ReplyDelete