Monday, December 14, 2009

சரணமடைய சொல்லித் தருவாய்!



சரணமடைய சொல்லித் தருவாய் - உன்
திருவடிகளில் அன்பைத் தருவாய்
சலன மடைகின்ற இதயமதின்
சஞ்சலம் அகற்றி அருளிடுவாய்!

நித்தமும் உந்தன் அடிபணியும்
புத்தியை எனக்குத் தந்திடுவாய்
உத்தமியே என் னுள்ளிருந்து
சத்தியமாய் நீ ஒளிதருவாய்!

இச்சைகள் யாவும் மறந்திடவும்
இச்சக உண்மை புரிந்திடவும்
சிற்சபை ஆடும் சிவனுடனே
சற்றெனக் கருள்வாய் உமையவளே!!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://shalinbharat.ning.com/photo/dancing-posture-lord-shiva-n

5 comments:

  1. இடறினவன் அம்மே என்றழைக்கத் தனிப்
    பாடங்கள் தேவையில்லை! எதுவுமில்லை!
    இடர்வரின் இறைத்துணையை வேண்டுதற்கும்
    சுடர் உள்ளே இருக்குதுபார்! துணைநிற்கும்!
    ஆகாசம் வெளியே தகராகாசம் உள்ளே
    சுடராகப் பொலிபவனே! சரவணபவ ஷண்முகனே!
    இதயத்துள் ஒளிரும் கனலே! குஹனே!
    அவனே எல்லாமும்! நம் செயல் வேறெதற்கு?
    சிவனே என்றிருக்க சிவசக்தி துணையாகும்!

    ReplyDelete
  2. வாங்க கிருஷ்ணமூர்த்தி சார்.

    மீண்டும் அழகா சொன்னீங்க. நீங்க இப்படி சொல்றதை கேட்கறதுக்காகவே இன்னும் புலம்பலாம் போல இருக்கு :)

    //சிவனே என்றிருக்க//

    அந்தக் கலைதான் இன்னும் பிடிபடலை. அதுக்கும் அவளைத்தான் கேட்கறேன்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இது கூட தெரியாதா? "அம்மா காளிகாம்பா ! உன்னை சரணடைந்தேன்." அப்படின்னு சொல்லணும். அவ்வளவு தான். :) இந்த பின்னூட்டத்தை படித்தாலே சரணம் அடைஞ்சாச்சுன்னு அர்த்தம். :)

    வழக்கம் போல எளிமை, இனிமை, அருமை.
    ~
    Radha

    ReplyDelete
  5. //இந்த பின்னூட்டத்தை படித்தாலே சரணம் அடைஞ்சாச்சுன்னு அர்த்தம். :)//

    அது சரி... அவ்வளவு சுலபமா? :)

    //வழக்கம் போல எளிமை, இனிமை, அருமை.//

    வழக்கம் போல நீங்களும் தொடர்ந்து வருகை தருவதற்கு மிக்க நன்றி ராதா.

    ReplyDelete