சிவகாமியே! அபிராமியே!
நற்றில்லை அம்பலத்தின்
நலம்தரும் நாயகியே
கொற்றவையே உமையே
களிதரும் கனியமுதே!
குற்றமில்லா உள்ளம்
குடிபுகும் கோமகளே
இட்டமுடன் அங்கு
நடமிடும் கோமளமே!
அபிராமியே! சிவகாமியே!
திருக்கட வூரினிலே
திகழ்ந்திடும் அம்பிகையே
நெருப்பென நின்றவர்க்கு
ஒருபுறம் தந்தவளே!
கறுத்திடும் திருமிடற்றான்
இடப்புறம் அமர்ந்தவளே
பொறுத்தருள் புரிபவளே
புவிபுகழ் மலைமகளே!
--கவிநயா
This comment has been removed by the author.
ReplyDeleteஅன்னையின் அழகும், தங்கள் கவிதையின் அழகும் கண்டு இரசித்தேன். நன்றி கவிநயா.
ReplyDeleteதினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html
ReplyDeletegud post.
ReplyDeletethanks
regards
www.hayyram.blogspot.com
So nice your song, that after trying with several raagas, I chose finally Raag Desh. It suits the theme very well. welcome to
ReplyDeletehttp://menakasury.blogspot.com
to listen to this song in Raag Desh.
subbu rathinam
//அன்னையின் அழகும், தங்கள் கவிதையின் அழகும் கண்டு இரசித்தேன். நன்றி கவிநயா.//
ReplyDeleteவாங்க கைலாஷி. மிக்க நன்றி.
// hayyram said...
ReplyDeletegud post.//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//welcome to
ReplyDeletehttp://menakasury.blogspot.com
to listen to this song in Raag Desh.//
Perfect தாத்தா. நீங்க தேர்ந்தெடுத்த ராகம் வெகு பொருத்தம் + மிக இனிமை. மிக்க நன்றி!
Very nice poem ! :)
ReplyDeleteEverytime I read your poems, it looks like writing a poem is a very simple thing. :)
ReplyDeleteவாங்க ராதா. மறந்துட்டு அதே பாட்டுக்கு கமெண்ட்டீட்டிங்களா? :)
ReplyDelete//Everytime I read your poems, it looks like writing a poem is a very simple thing. :)//
ஆமாம், எனக்குமே சில சமயம் அப்படித்தான் தோணும், யார் வேணாலும் எழுதலாம், ஏன் எழுத மாட்டேங்கிறாங்கன்னு. ஆனா சமயத்தில் எழுதணும்னு ரொம்ப ஆசைப் பட்டாலும் ஒரு வரியும் வராது. அப்ப தோணும், அவ்வளவு சுலபமில்லைதான் போல, அப்படின்னு :)
மறந்துட்டு எல்லாம் இல்லை. எனக்கு பொதுவாக இறைவன் புகழ் பாடும் பாடல்கள் பிடிக்கும்.
ReplyDeleteமிக மிக சில நேரங்களில் தான் புலம்பல் பாடல்கள் பிடிக்கும். இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதனால் சந்தோஷ பாடல்களுக்கு மேலும் மேலும் பின்னூட்டம். :)
//மிக மிக சில நேரங்களில் தான் புலம்பல் பாடல்கள் பிடிக்கும்.//
ReplyDeleteஅச்சோ. அதானே நான் நிறைய செய்வேன் :(
//இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதனால் சந்தோஷ பாடல்களுக்கு மேலும் மேலும் பின்னூட்டம். :)//
ரொம்ப சந்தோஷம் ராதா. அந்த சந்தோஷம் தொடர அன்னை அருளட்டும் :)