தடம் பார்த்து நடை நடந்து உன்னைத் தேடி வந்தேன்
இடம் பார்த்து ஏவல் செய்ய உன்னை நாடி வந்தேன்
(தடம்)
எங்கே எங்கே நீயென எண்ணம் போல அலைந்தேன்
இங்கே இங்கே எனஉன்னைக் கண்டு கொண்டால் மகிழ்வேன்
(தடம்)
விடமுண்ட கண்டனவன் இடமிருக்கும் கிளியே
குடங்கொண்ட விளக்கினைப்போல் உள்ளொளிரும் ஒளியே
வலங்கொண்டு உன்னைதினம் வணங்குகின்றேன் உமையே
மனங்கொண்டு நினைவில்நின்று வாழவைப்பாய் எமையே
(தடம்)
-கவிநயா
//விடமுண்ட கண்டனவன் இடமிருக்கும் கிளியே
ReplyDeleteகுடங்கொண்ட விளக்கினைப்போல் உள்ளொளிரும் ஒளியே//
எல்லார் உள்ளும் ஒளிரும் அன்னையே உனக்கு ஆயிரம் கோடி நமஸ்காரம்
வருகைக்கு மிக்க நன்றி கைலாஷி.
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=b32iTpamDCU
ReplyDeletesubbu thatha
பாடல் அருமையாக இருந்தது தாத்தா. மிக்க நன்றி. இது என்ன ராகம்?
ReplyDeleteஇங்கே இங்கே என உனைக் கண்டுகொண்டால் மகிழ்வேன்...
ReplyDeleteஎன பொங்கும் மகிழ்ச்சியில் , என்றும் பெற்றிராத
பேரானந்தத்தில்,
இது என்ன ராகம் என்று சொல்லவே மறந்து போனேன்.
ஆனந்த பைரவி ராகம்.
" வானோர் வணங்கும் அன்னையே...பஜிக்க அருள், வாக்கு தந்தாள் என அம்மையே " என்று
எங்கள் பள்ளியில் ( இ.ரெ.உய்ர் நிலைப்பள்ளி, திருச்சி.) (வருடம் 1945 முதல் 1955)
பள்ளி துவங்குமுன் தினந்தோறும் பாடப்பட்ட கடவுள் வாழ்த்து, இதே ஆனந்த பைரவி ராகத்தில்
தான். அதே மெட்டில் இதை நான் இட்டிருக்கிறேன்.
நல்ல சாரீரம் உடையவர்கள், ஸ்ருதியுடன் பாடி க்கேட்கவேண்டும்.
சுப்பு ரத்தினம்.
//ஆனந்த பைரவி ராகம்.
ReplyDelete" வானோர் வணங்கும் அன்னையே...பஜிக்க அருள், வாக்கு தந்தாள் என அம்மையே " என்று
எங்கள் பள்ளியில் ( இ.ரெ.உய்ர் நிலைப்பள்ளி, திருச்சி.) (வருடம் 1945 முதல் 1955)
பள்ளி துவங்குமுன் தினந்தோறும் பாடப்பட்ட கடவுள் வாழ்த்து, இதே ஆனந்த பைரவி ராகத்தில்
தான். அதே மெட்டில் இதை நான் இட்டிருக்கிறேன்.//
நன்றி தாத்தா. அந்தப் பாடலையும் கேட்க ஆவல். பாடி வலையேற்றுங்களேன். :)
கடவுள் துதி நல்லாயிருக்கு.
ReplyDeleteமிக்க நன்றி கருணாகரசு.
ReplyDelete//கிளியே ...உள்ளொளிரும் ஒளியே //
ReplyDelete"கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் ஒளியே!"
அக்கா ! நீங்கள் அபிராம பட்டர் சிஷ்யையா? :)
//அக்கா ! நீங்கள் அபிராம பட்டர் சிஷ்யையா? :)//
ReplyDelete:) அப்படியும் வச்சுக்கலாம். அந்தாதி உள்ளுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கறதால அப்பப்ப அதனுடைய பாதிப்பு இருக்கும் :)
வருகைக்கு நன்றி ராதா.
ungal paadalgaluku raagama amaithu myarchi panni irukeergala?
ReplyDelete//ungal paadalgaluku raagama amaithu myarchi panni irukeergala?//
ReplyDeleteவாங்க LK. முக்கால்வாசி நான் இடற எல்லா பாடல்களுக்கும் சுப்பு தாத்தா இசையமைச்சு பாடிடுவார். அந்தந்த பின்னூட்டங்களில் யூட்யூப் லிங்க் இருக்கும், பாருங்க.
உங்களுடைய வருகைக்கும் ஆர்வத்திற்கும் மிக்க நன்றி :)
சுப்பு தாத்தாவின் பின்னூட்டங்கள் "sury" என்ற பெயரில் இருக்கும்.
ReplyDelete