சுடராய் ஒளியாய் இருப்பவளே
சடுதியில் என்னிடம் வந்திடுவாய்
மழையாய் முகிலாய் இருப்பவளே
மனம் வைத்து என்னிடம் வந்திடுவாய்
வானாய் வளியாய் இருப்பவளே
விரைந்திங்கு என்னிடம் வந்திடுவாய்
நிலமாய் நீராய் இருப்பவளே
நீ உடன் என்னிடம் வந்திடுவாய்
அனுதினம் உன்னைப் பாடுகின்றேன்
அம்மா உன்னருள் நாடுகின்றேன்
உன்பதம் பணிந்தேன் ஏற்றுக் கொள்வாய்
உன்நிழலில் ஓரிடம் எனக்களிப்பாய்
-கவிநயா
சுடராய் ஒளியாய் இருப்பவள் தான் இங்குன்
ReplyDeleteஉடலாய் உயிராய் இருப்பதை உணர்ந்திடுவாய்
மழையாய் முகிலாய் இருப்பவள் தான் இங்கு
அழையாதே வரும் காற்றாய் இருப்பதைப் பார்!
மனமென்பதும் உணர்வென்பதும் அவள் தானே!
மனமே அவள் மஞ்சமும் ஆவதைப் பார்! அசைவது பார்!
வானாய் வளியாய் இருப்பவள்தான் உன்
ஊனாய் உயிராய் நிறைவதைப் பார்!
நிலமாய் நீராய் இருப்பவள்தான் இங்கே
உயிராய் மனமாய் விரிவதைப் பார்
எங்கெங்கு காணினும் சக்தியடா! அவள்
எங்கும் நிறைந்தவள்! எதனையும் படிப்பவள்!
இங்கொரு ஏக்கமாய் வந்ததும் அவள்தான்
ஆறுதல் தரும் கைகளாய் இருப்பதும் அவள்தான்!
தானே தன்னுடன் நடத்தும் விளையாட்டு!
நானே எல்லாம்! நானே நீ! நீயே நான்!
ஏற்பதெது நிழல் தருவதெது சொல்வாய்!
This comment has been removed by the author.
ReplyDeleteவானாய் வளியாய் இருப்பவளே
ReplyDeleteவிரைந்திங்கு என்னிடம் வந்திடுவாய்::))
ஆஹா! அருமையான வரிகள்
// சடுதியில் என்னிடம் வந்திடுவாய் //
ReplyDeleteதாயே தயாபரையே !
தனையனை கைவிடாயே !
கவிதாயினி அழைப்பை
நயமா நீ மறுப்பாய் !
சுட்ட அப்பளம் தருவேன் - எண்ணையில்
சுடாத அப்பளம் தருவேன் !
பால் பழம் தரும்
பாலன் உன் ப்ரியம் !
தாயே தயாபரையே !
தனையனை கைவிடாயே !
:)
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ReplyDeleteஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வாளாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே!
அழகான கவிதைக்கு மிக்க நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்.
ReplyDelete//நானே எல்லாம்! நானே நீ! நீயே நான்!
ஏற்பதெது நிழல் தருவதெது சொல்வாய்!//
தெரியலை எனக்கு. ஏட்டுச் சுரைக்காயா இருக்கறதெல்லாம் உள்ளாழ்ந்து உணரும் நாள் என்று வருமோ?
//ஆஹா! அருமையான வரிகள்//
ReplyDeleteநன்றி ராஜேஷ் :)
//கவிதாயினி அழைப்பை
ReplyDeleteநயமா நீ மறுப்பாய் !//
ராதா... ராதா...! எட்டுற தூரத்தில் இருந்தா இந்நேரம் உங்க காது என் கைல சிக்கியிருக்கும் :) நானே கஷ்டப்பட்டு அவளைக் கூப்பிடறேன், நீங்க வேற வந்து இப்படில்லாம் கெடுக்கறீங்களே. நியாயமா? :) என்னமோ நல்லா இருந்தா சரி! :)
//வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ReplyDeleteஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வாளாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே!//
நன்றி குமரா. மாணிக்கவாசகரின் திருவடிகளைப் பணிந்து வணங்கிக்கிறேன்.