Monday, April 5, 2010

ஜகன்மோகினீ !


சிந்தையில் நீஆட விந்தையில் நான்ஆழ
மந்திரமாய் வந்த வனமோகினீ

(சிந்தையில்)

சிந்துகவி பாட உன்நினைவில் வாழ
செந்தமிழ் தேன்தந்தாய் ஜகன்மோகினீ

(சிந்தையில்)

பனிமலையில் உறைவாள் பரமனுடன் அருள்வாள்
கனியிதழில் மெதுவாய் குறுநகையும் புரிவாள்

மதிமுடி சூடியவள் பதிஉடல் பாதியவள்
நினைவினில் ஊன்றியவள் சதம்என ஆகியவள்


-கவிநயா

எனக்கே இந்த பாடல் பாடிக்க ஆசை. எல்.கே. அவர்கள் கேட்டதை சாக்கா வச்சு பாடிட்டேன் :) இன்னொரு முயற்சி செய்திருக்கணுமோ என்னவோ, தனிமையும் நேரமும் கிடைக்கலை :(

சிந்தையில்நீஆட


அன்புடன்
கவிநயா

11 comments:

  1. மிக அற்புதம் . மிக்க நன்றி

    ReplyDelete
  2. //மிக அற்புதம் . மிக்க நன்றி//

    நன்றி ராஜேஷ்.

    ReplyDelete
  3. //enna ragamnu sonna vasathiya irukum//

    வாங்க எல்.கே. என் மனசில் ஒரு மெட்டு இருக்கு, ஆனா எனக்கு ராகம் பேரெல்லாம் தெரியாதே :( பாடிப் பதிய முடியுதான்னு பார்க்கிறேன்... (பாவம் நீங்கன்னுதான் கொஞ்சம் யோசிக்கிறேன் :)

    ReplyDelete
  4. பாடிட்டேன் எல்.கே. கேட்டு பாருங்க :) (வந்து என்னை திட்டக் கூடாது!)

    ReplyDelete
  5. இனிமே நீங்களும் எல்லா பாட்டையும் பாடி போடுங்க அக்கா. ரொம்ப நல்லா பாடியிருக்கீங்க.

    செந்தமிழாய் வந்தாய்ன்னு எழுதியிருக்கீங்க; ஆனா பாடறப்ப செந்தமிழ் தேன் தந்தாய்ன்னு வந்திருச்சு போல. பொருத்தம் தான்!

    ReplyDelete
  6. //இனிமே நீங்களும் எல்லா பாட்டையும் பாடி போடுங்க அக்கா. ரொம்ப நல்லா பாடியிருக்கீங்க.//

    ஆஹா, ரொம்ப சந்தோஷம் குமரா. (நெசந்தானே? :)

    //செந்தமிழாய் வந்தாய்ன்னு எழுதியிருக்கீங்க; ஆனா பாடறப்ப செந்தமிழ் தேன் தந்தாய்ன்னு வந்திருச்சு போல. பொருத்தம் தான்!//

    எப்பவும் செந்தமிழ் தேன் தந்தாய்னுதான் பாடுவேன், ஏன் அப்படி எழுதினேன்னு தெரியல. நீங்க சொன்ன பிறகுதான் கவனிச்சு, இப்ப மாத்திட்டேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  7. சிந்தையில் நீ ஆட ...

    சிந்தையும் சிவனும் ஒன்றே = அச்
    சிவனும் சக்தியும் ஒன்றே என‌

    சித்தத்தை சிவன் பால் வைத்தோர் எல்லோர்க்கும்

    தங்கள் கவிதை
    அவள் சன்னதியில்
    பக்தர்கள் பெறும்
    பாயசம்.

    ப்ருந்தாவன சாரங்க எனும் ராகத்தில் ( ஸ்ரீ ரங்கபுர விஹாரா...எனும் பாடலைக்கேட்டிருப்பீர்கள். அந்த ராகம்.)
    பாட முயற்சித்திருக்கிறேன்.

    நேரம் கிடைக்கும்பொழுது வரவும்.

    சுப்பு ரத்தினம்.
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  8. ஆஹா அருமை.

    ReplyDelete
  9. இப்பதான் கேட்க முடிஞ்சது தாத்தா. கிட்டத்தட்ட நான் நினைத்த ராகத்திலேயே அமைந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தாத்தா!

    ReplyDelete
  10. //ஆஹா அருமை.//

    வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக நன்றி அம்மு.

    ReplyDelete