Monday, April 12, 2010
சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம்!
சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - ஆதி
சக்தி தன்னை பக்தி செய்து பாதம் சூடுவோம்
சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - சிவ
சக்தி யவள் நாமம் சொல்லி நாளும் ஓதுவோம்
சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - நல்ல
புத்தி கொண்டு சக்தி தொண்டு செய்து வாழுவோம்
சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - அந்த
சக்தி யன்றி சக்தி இல்லை என்று காணுவோம்
சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - மாய
சக்தி தன்னை வென்று ஞான சக்தி தேடுவோம்
சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - சித்த
சுத்தி செய்து கொண்டு சக்தி அவளை நாடுவோம்
சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - மகா
சக்தி தன்னை நெஞ்சில் வைத்து நாளும் பேணுவோம்
சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - பரா
சக்தி தன்னை நித்தம் போற்றி மாலை சாற்றுவோம்
பா மாலை சாற்றுவோம்!
***
புன்னாக வராளியில் பாடித் தந்த சுப்பு தாத்தாவிற்கு நன்றி!
***
--கவிநயா
Subscribe to:
Post Comments (Atom)
ஓம் சக்தி... ஓம் சக்தி ... ஓம் சக்தி...
ReplyDelete//சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம்//
ReplyDeleteஅறு சீர்ச் சிந்து நல்லா இருக்கு-க்கா! :)
//- பரா
சக்தி தன்னை நித்தம் போற்றி மாலை சாற்றுவோம்
பா மாலை சாற்றுவோம்!//
ஓ...பா மாலை சாற்றிடுவோம்!
இது 191!
200க்கு என்ன ஸ்பெஷல்-ன்னு நீங்களே சொல்லுங்க!
சிந்து பாடினது அருமை!
ReplyDelete//ஓம் சக்தி... ஓம் சக்தி ... ஓம் சக்தி...//
ReplyDeleteஓம் சக்தி!
வருகைக்கு நன்றி தோழி.
//அறு சீர்ச் சிந்து நல்லா இருக்கு-க்கா! :)//
ReplyDeleteநன்றி கண்ணா :)
//200க்கு என்ன ஸ்பெஷல்-ன்னு நீங்களே சொல்லுங்க!//
அதெப்படி? நீங்களும்தான் சொல்லணும் :)
//சிந்து பாடினது அருமை!//
ReplyDeleteமிக்க நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்.
//சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம்//
ReplyDeleteசுத்தமான அறு சீர் சிந்து. அழகாக வடிவமக்கப்பட்டிருக்கிறது.
கண்ணபிரான் ஸார்
கரெக்டாதான் சொல்லி இருக்கிறார்.
பாடிடவும் எளிதாக இருக்கிறது.
பல ராகங்களில் பாடிடலாம் என்றாலும்
புன்னாக வராளி உடன் புன்னகைத்து
பாடு என்றது.
இங்கே வந்து கேளுங்கள்.
http://www.youtube.com/watch?v=d_d7v278XiA
சுப்பு ரத்தினம்.
நீங்கள் தேர்ந்தெடுத்த ராகத்தில் அருமையாக அமைந்திருக்கிறது தாத்தா. மிக்க நன்றி!
ReplyDeleteIn this blog picture and songs are very good, please any one send/publish Sri Bala Thiripura sundhari devi pic
ReplyDelete