தஞ்சமென்று உனைஅடைந்தேன் தாரகையே – என்றன்
நெஞ்சந்தனில் குடியிருக்க வாஉமையே
அஞ்சுகின்ற நெஞ்சமுடன் உன்னைஅடைந்தேன்
அஞ்சுகமே தஞ்சமென்று கண்டுதெளிந்தேன்
அஞ்சுமலர் அங்கையிலே ஏந்தியிருப்பாய்
அஞ்சேலென்று அன்புடனே அரவணைப்பாய்
பிஞ்சுமலர்ப் பதங்களையென் சென்னிபதிப்பாய்
பஞ்சிலிட்ட தீயாய்என்றன் வினையெரிப்பாய்!
--கவிநயா
செவ்வாய்க்கிழமை அன்று தான் இப்பதிவில் பாடலை இடவேண்டுமென்று நான் ஷெட்யூல் செய்து
ReplyDeleteகருமாரி அம்மன் அருள் வேண்டி ஒரு பாடலைப் பதிவு செய்திருந்தேன்.
அது இன்று காலை 12 மணி அளவில் வந்திருக்கிறதா என ஆவலுடன் திறந்தபொழுது தங்கள்
பாடல் காட்சியளித்தது.
இதுவும் அவள் செயலே.
தஞ்சமென அண்டிவிடின்
தாங்குவது அவளல்லவோ !
தீராத துயரத்தையும்
தீர்த்துவைக்கும் தாயல்லவோ !!
உங்களது பாடல் நேர்த்தியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
எனது பாடலை ( ! ) ரி ஷெட்யூல் செய்துவிட்டேன். தேவியின் அருள் கிடைத்தால் அது
அடுத்த வாரம் வரும்.
சுப்பு தாத்தா.
http://vazhvuneri.blogspot.com .
மன்னிக்க வேண்டும் தாத்தா. அம்மன் பாட்டில் வெகு நாட்களாக தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பதிவிட்டு வருகிறேன். புரிதலுக்கு நன்றி.
ReplyDeleteபாடலைக் கேட்ட பின் மீண்டும் வருகிறேன்.
வழக்கம் போலவே அருமையான கவிதை அக்கா.
ReplyDelete//வழக்கம் போலவே அருமையான கவிதை அக்கா.//
ReplyDeleteநன்றி தம்பீ :)
தாத்தா, உங்கள் குரலில் பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி.
ReplyDelete//தஞ்சமென அண்டிவிடின்
தாங்குவது அவளல்லவோ !
தீராத துயரத்தையும்
தீர்த்துவைக்கும் தாயல்லவோ !!//
நன்றாகச் சொன்னீர்கள். இன்னும் நிறையச் சொல்லுங்கள், அவளைப் பற்றி.