Tuesday, September 28, 2010
கருமாரி அம்மா
கருமாரி .அம்மா ... நின்
கருணைவிழி அருள் வேண்டி
காலடியில்
காத்திருப்பேன்.. கருமாரி. அம்மா,,,
அருள் மாரி பொழிவாய் நீ
அகிலமெல்லாம் காத்திடுவாய் !
ஆயிரம் கண் உடையாய் எங்கள்
அவலங்கள் தொலைத்திடுவாய் = கருமாரி அம்மா
இருள் இடர் இன்னல் இங்கே
இனி இல்லை எனச் சொல்வாய் !
ஈரேழு உலகத்தாரும்
மீண்டுவரும் வழி சொல்வாய் = கருமாரி அம்மா
உள்ளத்திலே குடிபுகுந்து-=என்
உள்ளத்திலே குடி புகுந்து, அருள்
வெள்ளத்தி லதையமிழ்த்தி
உண்மையெது ? உணரச்செய்வாய் !
*மெய்யதனைச் சுட்டெரித்து
பொய்யதனை விலகச்செய்வாய் ! == கருமாரி அம்மா
எண்ணி மகிழ்ந்த எல்லாம்
புண் என உணர்ந்தேன் நான்
ஏங்கிய சங்கதி யாவும்
வாங்கிவந்த வினை ! புரிந்தேன் !. = கருமாரி.அம்மா
ஒன்பது வாசல் என்னில்
ஒரு நாள் ஒடுங்கும் மூடும் = அன்று
நின் தாள் நான் சரணடைந்து
நிஜம் நீயே !! உணர்வேனோ ? = கருமாரி அம்மா
ஓடோடி பெற்றதெல்லாம்
ஓடியே ஒளிந்துகொள்ள
ஒப்பிலா உந்தனருள்
ஓம்காரம . வழி காட்டும். ...கருமாரி.அம்மா
அபய கரம் நினது
அண்மையிலே வந்துவிடும்.
ஐயமில்லை. அதனொளியில்
ஐக்கியம் நான் ஆகிடுவேன். ... கருமாரி .அம்மா
*மெய் = உடல்
கருமாரி அம்மன் கோவிலுக்குச் சென்று பார்க்க இங்கே கிளிக்கவும்.
நன்றி: தினமலர் நாள் இதழ் .
திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் பற்றிய விவரங்கள் அறிய இங்கே கிளிக்கவும்.
அம்மன் சன்னதியில் மனம் உருகி பாடும் பாடல்களைக் கேட்க விருப்பமா ?
இங்கே வாருங்கள்.
சுப்பு தாத்தா பாடுவதை கேட்க பொறுமை தேவை. விருப்பம் உள்ளவர்களுக்காக மட்டும்:
இங்கே
எழுதியது
சுப்பு ரத்தினம்
Subscribe to:
Post Comments (Atom)
இங்கு உங்களின் முதல் பதிவிற்கு வாழ்த்துகள் தாத்தா :)
ReplyDeleteரெகார்டிங்கில் noise கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. மற்றபடி பாடலும் ராகமும் இனிமையாக இருக்கின்றன.
தொடர்ந்து இன்னும் நிறைய பாடல்கள் பாடி இடவேண்டும் ஐயா!
ReplyDeleteநல்வரவு சூரி சார்! முதல் பதிவில் அருள் மாரி பொழிகிறது!
ReplyDeleteகூடவே தத்துவமும் நிறைய சொல்லி இருக்கீக போல! :)
//ஏங்கிய சங்கதி யாவும்
வாங்கிவந்த வினை ! புரிந்தேன்//
//ஓடோடி பெற்றதெல்லாம்
ஓடியே ஒளிந்துகொள்ள
ஒப்பிலா உந்தனருள்
ஓம்காரம . வழி காட்டும்//
அருமையான பாடல்
ReplyDeleteநன்றி அய்யா
//சுப்பு தாத்தா பாடுவதை கேட்க பொறுமை தேவை. //
ReplyDelete:-)
முதலில் இதை படித்து விட்டு பாடலை கேட்காமல் சென்று விட்டேன்.
சுப்பு தாத்தாவிடம் பாடல் கேட்கவும் நன்றாகவே இருக்கிறது என்று சொல்லுங்கள் அக்கா.
வாங்க ராதா!
ReplyDeleteஇது சுப்பு தாத்தாவின் சொந்தப் பாடல்; எழுதியதும் பாடியதும் அவரே. அவருடைய சொந்த இடுகை இது :)