Monday, February 7, 2011
திருவடி நிழலில் ஒரு இடம் தருவாய்!
திருவடி நிழலில் ஒருஇடம் தருவாய் அம்மா ஸ்ரீசக்தி
தினம் உன்னைப்பாட வரமொன்று தருவாய் அம்மா சிவசக்தி
மனதினில் உன்றன் நினைவொன்றே வேண்டும் அம்மா ஸ்ரீசக்தி
மாயையி னின்றும் விடுதலை வேண்டும் அம்மா சிவசக்தி
ஐம்புலன் தன்னை அடக்கிட வேண்டும் அம்மா ஸ்ரீசக்தி
அனைத்திலும் உனையே கண்டிட வேண்டும் அம்மா சிவசக்தி
கலங்கிடும் உள்ளம் களிப்புற வேண்டும் அம்மா ஸ்ரீசக்தி
கலங்கரை விளக்காய் நீவர வேண்டும் அம்மா சிவசக்தி
கனிவாய் வருவாய் கடலாய் அருள்வாய் அம்மா ஸ்ரீசக்தி
உடனே வருவாய் உயிருள் நிறைவாய் அம்மா சிவசக்தி
--கவிநயா
சுப்பு தாத்தா, காம்போதியில் பாடியிருக்கார்... நன்றி தாத்தா!
Subscribe to:
Post Comments (Atom)
\\கனிவாய் வருவாய் கடலாய் அருள்வாய் அம்மா ஸ்ரீசக்தி
ReplyDeleteஉடனே வருவாய் உயிருள் நிறைவாய் அம்மா சிவசக்தி\\
கொஞ்சம் கொஞ்சம் திருப்புகழ் மாதிரி இருக்கே:-)
இதை விட என்ன வேண்டும்
ReplyDeleteஉங்களின் கவிதை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்
your sivasakthisong is very sweet!awaiting to hear surysir's
ReplyDeletemusic.
now that i have come to know
youhave already read the story of S.L,i intend to write about
'sladai[pun]'in S.L[22] which may be interesting [in periyavaa's words]
//கலங்கிடும் உள்ளம் களிப்புற வேண்டும் அம்மா ஸ்ரீசக்தி
ReplyDeleteகலங்கரை விளக்காய் நீவர வேண்டும் அம்மா சிவசக்தி//
Namma avalaye nambittu irundhalum; azha vachu vedikka pakkara akka. Inimelum sodhana senja thanga manasula thembu illanu sollunga akka avakitta.
எனக்கு பாரதியார் பாட்டைப் படிச்ச மாதிரி இருக்கு. அவர் தான் நிறைய வேண்டும் வேண்டும்ன்னு எழுதுவார். :-)
ReplyDeleteகாலையில அம்மன் படத்தைப் பார்த்து மனசு அமைதியாச்சு அக்கா. நன்றி.
//கொஞ்சம் கொஞ்சம் திருப்புகழ் மாதிரி இருக்கே:-)//
ReplyDeleteவாசிப்பவையின் தாக்கமெல்லாம் எழுத்தில் வருவது சகஜம்தானே? :)
நன்றி கோபி.
//இதை விட என்ன வேண்டும்
ReplyDeleteஉங்களின் கவிதை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்//
ஆகா, மிக்க நன்றி திகழ்.
//your sivasakthisong is very sweet!awaiting to hear surysir's
ReplyDeletemusic.//
நானும்... நன்றி லலிதாம்மா.
//now that i have come to know
youhave already read the story of S.L,i intend to write about
'sladai[pun]'in S.L[22] which may be interesting [in periyavaa's words]//
காத்திருக்கேன்... :)
//Namma avalaye nambittu irundhalum; azha vachu vedikka pakkara akka. Inimelum sodhana senja thanga manasula thembu illanu sollunga akka avakitta.//
ReplyDeleteஏதாவது சோதனை செய்தால், கூடவே அதை தாங்கும் திறனும் அவளே தருவாள் சங்கர். கவலைப்படாதீங்க.
//எனக்கு பாரதியார் பாட்டைப் படிச்ச மாதிரி இருக்கு. அவர் தான் நிறைய வேண்டும் வேண்டும்ன்னு எழுதுவார். :-)//
ReplyDelete:)))
//காலையில அம்மன் படத்தைப் பார்த்து மனசு அமைதியாச்சு அக்கா. நன்றி.//
ஆமால்ல? நம்ம மீனாக்ஷி படம்தான். நன்றி குமரா.
// ஐம்புலன் தன்னை அடக்கிட வேண்டும் அம்மா ஸ்ரீசக்தி//
ReplyDeleteஎதை அடக்கினாலும் அடக்கலாம், இந்த நாக்கை அடக்க முடியாதே !
அம்பாளுக்கு அர்ச்சனை செய்யும்பொழுதே அந்த பாயசம், வடை மேலேயே
கண் போகிறதே !!
சரி சரி ! கண்ணை மூடிக்கொண்டு இந்த பாடலை காம்போதி ராகத்தில்
பாடிப்பார்ப்போம். அப்படியாவது இந்த ஐம்புலன் சமாசாரம் அட்ஜஸ்ட்
ஆகிறதா பார்ப்போம்.
சுப்பு ரத்தினம்.
@Kavinaya akka: Sari akka.. All is well nu eduthukka vendiyadhudhan. :)
ReplyDelete@Sury sir: Sir, Shivashakti raagathla pannirukkalamla? :) :)
//காம்போதி ராகத்தில்
ReplyDeleteபாடிப்பார்ப்போம். அப்படியாவது இந்த ஐம்புலன் சமாசாரம் அட்ஜஸ்ட்
ஆகிறதா பார்ப்போம்.//
:) அட்ஜஸ்ட் ஆயிருக்குமே? :)
நல்லாயிருக்கு தாத்தா. குறிப்பா கடைசி இரு வரிகளை நீங்க பாடியிருக்கிற விதம் அழகா இருந்தது. மிக்க நன்றி! இடுகையில் இணைச்சிருக்கேன்.
//@Kavinaya akka: Sari akka.. All is well nu eduthukka vendiyadhudhan. :)//
ReplyDeleteஅதேதான் :)
Romba nallaairukku Kavinaya.
ReplyDeleteRM.Natarajan.
Natarajan said...
ReplyDelete//Romba nallaairukku Kavinaya.//
மிக்க நன்றி!
Another gem of a song...repeating what others have already said... i am also reminded of Bharathi. :-)
ReplyDeleteநன்றி ராதா. எனக்குமே பிடிச்ச பாட்டு :)
ReplyDelete