சொல்லனைத்தும் இனிக்குதடி சுந்தரியே
உன்னைச் சொல்லிச் சொல்லிப் பாடப் பாட சுந்தரியே
கள்ளெடுத்துக் குடித்ததுபோல் சுந்தரியே
ஒரு களிமயக்கம் வருகுதடி சுந்தரியே
தெள்ளுதமிழ் சொல்லெடுத்து
தேவியுன்னை பாடிடுவேன்
துள்ளும்இசைச் சரம்தொடுத்து
நாளுமுன்னை வாழ்த்திடுவேன்
கண்ணிமைக்குள் உன்னை வைத்து
கண்மணியே போற்றிடுவேன் - நீ
கண்ணெடுத்து பார்த்து விட்டால்
விண்ணைஎட்டிப் பிடித்திடுவேன்
--கவிநயா
sweet fragrance is emanating from
ReplyDeleteyr song on sundhari[as from bhaarathi's songs].feel like doing 'kolaattam 'for the song!
Lalitha amma, I also felt like reading Bharati.. Sooper Akka.. :)
ReplyDelete\\சொல்லனைத்தும் இனிக்குதடி சுந்தரியே
ReplyDeleteஉன்னைச் சொல்லிச் சொல்லிப் பாடப் பாட சுந்தரியே
கள்ளெடுத்துக் குடித்ததுபோல் சுந்தரியே
ஒரு களிமயக்கம் வருகுதடி சுந்தரியே\\
வடிவைப் பற்றி எழுதும் எவையும் வடிவாகவே அமையும்.
இதை ஒரு வாட்டி படிச்சுடுங்களேன். நன்றி.
http://ramamoorthygopi.blogspot.com/2011/01/blog-post_21.html
லலிதாம்மா, அழகான ரசனை உங்களது :) கோலாட்டம், சூப்பர் ஐடியா :) நன்றி அம்மா.
ReplyDeleteமிக்க நன்றி சங்கர் :)
ReplyDelete//வடிவைப் பற்றி எழுதும் எவையும் வடிவாகவே அமையும்.//
ReplyDeleteநன்றாகச் சொன்னீர்கள் கோபி. நன்றி :)
//இதை ஒரு வாட்டி படிச்சுடுங்களேன். நன்றி.//
இதோ வந்துகிட்டே இருக்கேன்...
oh ! i too was reminded of bharathi on reading the poem !! :-)))
ReplyDeletethen, what a lovely picture akka ! thanks thanks thanks a ton !!!
கண் களிக்கும்படி கண்டுகொண்டேன்...
ReplyDeleteமண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களிற் றோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே !
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி
அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் !
மலர்த்தாள் நம் சென்னியதே.
//oh ! i too was reminded of bharathi on reading the poem !! :-)))//
ReplyDeleteநன்றி ராதா :)
//then, what a lovely picture akka ! thanks thanks thanks a ton !!!//
:))) பொருத்தமான அந்தாதி வரிகளை சொல்லியிருக்கீங்க :)
அந்த சுந்தரி சௌந்தர்ய லஹரியின்
ReplyDeleteபிரதான நாயகி அல்லவோ !! ஸர்வ ப்ரகாசினி, ஸர்வ மோஹினி அவள்.
த்வதீயம் சௌந்தர்யம் என 11 வது பாடலில் வருகிறது.
அவள் ஒளியில் மயங்கி தன்னை இழந்து நிற்பதை
கள்ளின் போதை தரும் மயக்கத்துக்கு ஒப்பிடுகிறீர்களா !!
பாகேஸ்வரி ராகம் பொருத்தமாக இருக்கிறது.
சுப்பு தாத்தா.
http://vazhvuneri.blogspot.com
அழகாகச் சொன்னீர்கள் தாத்தா. ஆனால் பாடலை எங்கே இட்டிருக்கீங்கன்னு தெரியலையே...
ReplyDelete