Friday, February 18, 2011

மீனாக்ஷி நீ ஆதரி!


காத்யாயனி கதம்ப வனவாசினி கடைக்கண் பாரம்மா..
எனை பார்த்தலும் பாரமா? இக்ஷனமே..

சோதனை தாளேன் கோவிந்தன் சோதரி
மீனாக்ஷி நீ ஆதரி.. இக்ஷணமே..

தஞ்சம் எனவந்து கெஞ்சும் பஞ்சைக்கு
கஞ்சப் பூம்பதத்தின் கொஞ்சும் பொன்கொலுசு
அஞ்சேல் அஞ்சேல் என செஞ்சொல்லை கூறாதா?
நெஞ்சின் சஞ்சலம் தீராதா? இக்ஷணமே..

--சங்கர்

பி.கு.: பார்த்தோன்னே தெரிஞ்சிருக்குமே என் பாட்டு இல்லைன்னு? :) அவ்ளோ சூப்பரா இருக்கு, அவள் மேலான சங்கரின் முதல் பாடல்! அவர் பூர்வி கல்யாணி ராகத்தில் அமைச்சிருக்காராம். அவர் அனுப்பின பிறகு அதையும் சேர்த்துடுவோம் -- கவிநயா

சுப்பு தாத்தா தோடி ராகத்தில் விருத்தமாக அமைத்திருக்கும் அழகைக் கேட்டு மகிழுங்கள்!

13 comments:

  1. mukkannanin manaththaich
    chokkavaiththa meenaalai,
    'chik'kenappaavalaiyil
    sikkavaiththa sankara!
    ekkanamum nazhuvaamal
    thakkavaippai avalai;
    pakkaththil avalirukka
    thukkaththukkidamundo?

    ReplyDelete
  2. @Kavinaya akka: Thaks for posting this akka. :)
    Thanks for the comments too. :) :)

    @Lalitha amma: Unga comment/kavidhai romba azhaga irukku amma. :)Thanks a lot. :)

    ReplyDelete
  3. சங்கர்,
    உங்களுக்குள் ஒரு பாபநாசம் சிவன் உள்ளார் என்று நினைக்கிறேன். :-)

    ReplyDelete
  4. //பார்த்தோன்னே தெரிஞ்சிருக்குமே என் பாட்டு இல்லைன்னு? :) அவ்ளோ சூப்பரா இருக்கு //
    இப்போ நாங்க என்ன சொல்லணும்? உங்க பாடல் வேறொரு வகையில் சூப்பரா இருக்கும்.
    அது என்ன வகைன்னு சொல்ல மாட்டேன். :-)

    ReplyDelete
  5. ராதா.. கிண்டல் செய்றீங்களா? :)
    இருந்தாலும் ரொம்ப நன்றி :)
    கவிநயா அக்காவோட கவித்திறன காமிச்சிக்காம அடக்கமா இருக்கறது
    அவங்களோட பெருந்தன்மைய காமிக்குது. :)

    ReplyDelete
  6. என்ன இது வரிசையா மீனாட்சி அம்மன் படத்தோட பாட்டுகளா வருது?! :-)

    சங்கர், இராதா சொன்னதை வழிமொழிகிறேன்! :-)

    ReplyDelete
  7. குமரன் அண்ணா.. ரொம்ப நன்றி!
    எல்லாம் அவள் செயல். :) அவ நம்ப கிட்டேர்ந்து எழுதி வாங்கிக்கறாள்

    ReplyDelete
  8. முக்கண்ணனின் மனத்தை
    சொக்கவைத்த மீனாளை
    'சிக்'கெனப் பாவலையில்
    சிக்கவைத்த சங்கரா!
    எக்கணமும் நழுவாமல்
    தக்கவைப்பாய் அவளை;
    பக்கத்தில் அவளிருக்க
    துக்கத்துக் கிடமுண்டோ?

    எவ்வளவு அழகா எழுதியிருக்கீங்க லலிதாம்மா. அதை தாங்கிலத்தில் படிக்க சிரமமாயிருந்ததால், தமிழில் எழுதிப் பார்த்தேன் :)

    சங்கர், தம்பீஸை நானும் வழிமொழியறேன் :)

    ReplyDelete
  9. //இப்போ நாங்க என்ன சொல்லணும்? உங்க பாடல் வேறொரு வகையில் சூப்பரா இருக்கும்.
    அது என்ன வகைன்னு சொல்ல மாட்டேன். :-)//

    ஹாஹா :) நீங்க என்ன சொல்லணும்? நீங்க சொன்னது உண்மைதானக்கா அப்படின்னு சொல்லணும் :)

    இன்னொரு வகைன்னு நீங்க எதைக் குறிப்பிட்டீங்கன்னு எனக்கே தெரியும்னு நினைக்கிறேன், ஆனா நானும் சொல்ல மாட்டேன்! :) ஏதோ ஒரு வகையில் சகிக்கபிளா இருந்தா சரிதான் :) நன்றி தம்பீ.

    ReplyDelete
  10. //என்ன இது வரிசையா மீனாட்சி அம்மன் படத்தோட பாட்டுகளா வருது?! :-)//

    ஆமால்ல?

    ராதா இந்தப் படத்தையும் க்ளிக்கிப் பாருங்க. நான் முதல் முதல்ல பார்த்த போது சொக்கிப் போயிட்டேன். (இப்பவும்தான் :)

    ReplyDelete
  11. ராதா அண்ணா பாக்கறதுக்கு முன்னாடி நான் பாத்துட்டேன் ..
    தயானந்த சரஸ்வதி சுவாமிகளோட, "மதுர மதுர மீனாக்ஷி மதுராபுரி நிலையே" கீர்த்தனை உடனே நினைவுக்கு வந்தது.
    அவர் எப்படி அம்பாள அனுபவிச்சுருப்பார்னு உணர முடிஞ்சுது அக்கா!!

    ReplyDelete
  12. :-) ஆமாம் அக்கா. இந்தப் படமும் (standard meenakshi) அருமை தான். எனக்கும் முதன் முதலில் பார்த்த பொழுதே மிகவும் பிடித்துவிட்டது. :-)

    ReplyDelete
  13. //அவர் எப்படி அம்பாள அனுபவிச்சுருப்பார்னு உணர முடிஞ்சுது அக்கா!!//

    நல்லா சொன்னீங்க சங்கர் :)

    //எனக்கும் முதன் முதலில் பார்த்த பொழுதே மிகவும் பிடித்துவிட்டது. :-)//

    same pinch ;)

    ReplyDelete