Thursday, April 28, 2011

த்ரிபுரசுந்தரி மா (சாயி பஜன்)



த்ரிபுரசுந்தரி மா - அம்ப
தயாஸாகரி மா
சுந்தர வதனி மா - அம்ப
சுகுண மனோகரி மா
ஜய ஜகத்ஜனனி மா - அம்ப
ஜகதோத்தாரினி மா
பர்த்தி நிவாஸினி மா - அம்ப
பாப விமோசனி மா




மூவுலக அழகியே அம்மா - அம்மா
கருணைக்கடலே அம்மா
அழகு முகத்தவளே அம்மா - அம்மா
நற்குணத்தவளே அம்மா
உலகன்னையே அம்மா - அம்மா
உலகை உயர்த்துபவளே அம்மா
பர்த்தியில் வாழ்பவளே அம்மா - அம்மா
பாவத்தை நீக்குபவளே அம்மா

12 comments:

  1. நல்லா இருக்கு கவி-க்கா!
    //பர்த்தி நிவாஸினி// பர்த்தி-ன்னா என்ன-க்கா?

    ReplyDelete
  2. ஆமா. அப்படின்னா என்ன-க்கா?

    அக்கா ஊருல இருந்து வந்த பின்னாடி சொல்லுவாங்க இரவி. :-)

    ReplyDelete
  3. Oh Sorry! அம்மன் பாட்டு-ன்னா கவிக்கா-ன்னு தான் எண்ணத் தோனுது! :)
    அவங்க புள்ளிருக்கு வேளுர் தையல் நாயகி கூடப் பேசிக்கிட்டு இருப்பாங்க! நீங்க பொருள் சொல்லுங்க குமரன்! :)

    ReplyDelete
  4. இந்தப் பாட்டுல வர்ற பர்த்தி 'புட்ட பர்த்தி'யின் செல்லப்பெயர். :-)

    ReplyDelete
  5. ஓ! பர்த்தி நிவாசினி-ன்னு வருதே, பர்த்தா நிவாசினியா இருக்குமோ (மாதொரு பாகன்)-ன்னு பார்த்தேன்! :)

    பர்த்தி என்றால் என்ன பொருள் குமரன்?
    எங்கும் வாசம் செய்பவள், புட்டபர்த்தியிலும் வாசம் செய்பவள் என்று கொள்ளலாம் தான்! ரம்யக பர்த்தினி-ன்னு கூட கேட்டிருக்கேன்! அதான் "பர்த்தி" என்றால் என்ன-ன்னு கேட்க தோனுச்சி!

    ReplyDelete
  6. புட்ட என்றால் புற்றுகள். புட்டபர்த்தி என்றால் புற்றுகள் நிறைந்த இடம்ன்னு பொருள் இரவி.

    ரம்யகபர்த்தினிங்கறதை ரம்ய கபர்த்தினின்னு பிரிக்கணும். ரம்மியமான கூந்தலையுடையவள்ன்னு பொருள். சிவபெருமானுக்கு 'கபர்த்தின்'ன்னு ஒரு பெயர் இருக்கு - சிவாஷ்டோத்தரத்தில் வரும்.

    ReplyDelete
  7. வடமொழிச் சொல் ஒரு சொல்-க்கு நன்றி குமரன்! :)

    புட்டபர்த்தி = புற்றிடம்
    புற்றிடம் கொண்ட பெருமான்-ன்னு திருவாருர் அப்பனுக்குப் பேரு!

    ரம்ய கபர்த்தினி = அஞ்சடை!

    மெளலி அண்ணா பார்த்தாரு-ன்னா என்னைய கொன்னே போட்டுருவாரு! :)

    ReplyDelete
  8. பர்த்தி நிவாசினி-ன்னு முதல்-ல்ல பார்த்த போதே, சாயி பாபா குரல்-ல இருக்கே, புட்டபர்த்தியோ-ன்னு தோனிச்சி! ஆனா புட்டபர்த்தியில் ஏது அம்பாள்?-ன்னு தோனவே, பர்த்தா நிவாசினி (புருசன் உடம்பில் வசிப்பவள்)-ன்னு நானா ஒரு புதுச் சொல்லை உருவாக்கிட்டேன்! :)) நீங்க மட்டும் தான் வக்ஷஸ்தல வாசினி-ன்னு சொல்லணுமா? நாங்களும் சொல்லறோம் பர்த்தா-நி-வாசினி! புத்தியில் "பட்டை" தெரிகிறதா? :)

    ReplyDelete
  9. குரல் சாயி பாபா குரல் இல்லை இரவி. சுந்தரம்ன்னு சாயிபாபாவின் இல்லம் ஒன்று சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கு. அஞ்சலிதேவி சாயி டிரஸ்டுக்குத் தந்ததுன்னு கேள்விபட்டிருக்கேன். அங்கே வாரந்தோறும் நடக்கும் பஜனையில் பாடும் ஒரு பெண் பாடகர் பாடியது இது என்று நினைக்கிறேன். அந்தக் குழுவினர் பாடி 'சுந்தரம் சாய் பஜன்ஸ்'ன்னு தொடராக நிறைய இசைத்தொகுப்புகள் வந்திருக்கு. என்னிடம் பல தொகுப்புகள் இருக்கின்றன. சுசிலாம்மாவும் மலேசியா வாசுதேவனும் இன்னும் சில திரையிசைப்பாடகர்களும் இங்கே அடிக்கடி வந்து பஜனையில் பாடுவார்கள் என்று கேள்விபட்டிருக்கேன்.

    ReplyDelete
  10. இனிமையான அம்பாள் பஜன்!

    சத்யா சாய் பக்தர்கள் அவரையே எல்லாமாக நினைப்பதால்,இந்தபஜனையில் அவரையே அன்னையாக எண்ணிப் பாடும் பாட்டு இது!பர்த்தி நிவாசினி என்பது பாபாவையே அம்பாளாக நினைத்துப் பாடுவதுதான்[என்னைப் பொறுத்தவரை]!

    ReplyDelete
  11. ஆமாம் அம்மா. நீங்க சொல்றது சரி தான்.

    சாயி மா அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.

    ReplyDelete
  12. அழகான பஜன். நன்றி குமரா.

    ReplyDelete