Monday, May 16, 2011

இமைப்பொழுதும் நீங்காதிரு!



இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா திருப்பாய்
இல்லை ஒருதுயரம் எனநீயே உரைப்பாய்
கணப்பொழுதில் மறைகின்ற மின்னல் போலன்றி
எப்பொழுதும் என்னுள்ளே பரிதியாய் ஒளிர்வாய்

சுடுநெருப்பின் வெம்மைபோல் குளிர்நீரின் தண்மைபோல்
இலைஉடுக்கும் பசுமைபோல் வான்நிலவின் வெண்மைபோல்
ஒருநொடியும் அகலாமல் என்னுள்ளே நிறைவாய்
உருகாத பனியாகி உள்ளத்தில் உறைவாய்

உன்னடிகள் உறுதியுடன் பற்றும்வரம் தருவாய்
உன்னையன்றி ஒருநினைவும் அற்றிடவே அருள்வாய்
மயக்கம்தரும் மாயைஎனும் மருள்நீக்க வருவாய்
இயக்கத்தின் மூலமே எம்மைக் காத்தருள்வாய்


--கவிநயா

8 comments:

  1. பாடல் கேட்டு
    பார்வை பார்க்காது இருப்பாளோ

    ReplyDelete
  2. இமையாய் நீயிருக்க‌
    எமக்கு ஏது பயமம்மா

    இமையாய் நீயிருக்க‌
    இருளும் இங்கே இல்லையம்மா

    இமையாய் நீயிருக்க‌
    இன்பம் ஆறாய்ப் பொங்குதம்மா

    இமையாய் நீயிருக்க‌
    இமயமும் துளியாய்த் தெரியதம்மா

    இமையாய் நீயிருக்க‌
    இதயமும் வலிமை கொள்ளதம்மா

    இமையாய் நீயிருக்க‌
    எம்மை வெல்ல யாரம்மா

    ReplyDelete
  3. isaiyodu rasikkak kaaththirukken
    subbusir!

    ReplyDelete
  4. //பாடல் கேட்டு
    பார்வை பார்க்காது இருப்பாளோ//

    நன்றி திகழ்.

    //இமையாய் நீயிருக்க‌
    எமக்கு ஏது பயமம்மா

    இமையாய் நீயிருக்க‌
    இருளும் இங்கே இல்லையம்மா

    இமையாய் நீயிருக்க‌
    இன்பம் ஆறாய்ப் பொங்குதம்மா

    இமையாய் நீயிருக்க‌
    இமயமும் துளியாய்த் தெரியதம்மா

    இமையாய் நீயிருக்க‌
    இதயமும் வலிமை கொள்ளதம்மா

    இமையாய் நீயிருக்க‌
    எம்மை வெல்ல யாரம்மா//

    அருமை, அருமை.

    ReplyDelete
  5. //isaiyodu rasikkak kaaththirukken
    subbusir!//

    வாங்க லலிதாம்மா. நானும்!

    ReplyDelete
  6. கணப்பொழுதில் மறைகின்ற மின்னல் போலன்றி
    எப்பொழுதும் என்னுள்ளே பரிதியாய் ஒளிர்வாய்:)

    Non stop -aa தொடர்ந்து கவிதை எழுதி தள்றீங்க :)
    அம்மன் அருள் வாங்காம விட போறதில்ல போலிருக்கே :))

    ReplyDelete
  7. வாங்க ராஜேஷ்.

    //Non stop -aa தொடர்ந்து கவிதை எழுதி தள்றீங்க :)//

    தொடர்ந்து இடறதால அப்படி தோணுது உங்களுக்கு. ஆனா வாரக் கணக்கில் எல்லாம் எதுவும் எழுதமால் இருந்திருக்கேன். அந்த மாதிரி சமயங்களில் ஒரு வருஷம் ரெண்டு வருஷம் முன்னாடி எழுதினதெல்லாம் இடறதுண்டு.

    அவள் விரும்பற வரைக்கும் வண்டி ஓடும்... :)

    வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete