Monday, May 30, 2011

ஓர் சக்தி அவளே!



ஓம்சக்தி ஓம்சக்தி என்று பாடுவோம்
ஓயாமல் அவள்நாமம் என்றும் ஓதுவோம்
உன்சக்தி என்சக்தி என்றிங் கில்லை
ஓர்சக்தி அவளேயென் றுணர்வோம் உண்மை

சரணடைந்தால் சூலமேந்தி வருவாள் சக்தி
மரணங்கூட அணுகாமல் காப்பாள் சக்தி
பரமென்றே தொழுதுநின்றால் மகிழ்வாள் சக்தி
சிவமோடு சேர்ந்துஅருள் பொழிவாள் சக்தி

சக்திஅவ ளாலேதான் உலகம் இயங்கும் - அவளை
பக்திசெய்ய மறந்தாலே உள்ளம் மயங்கும்
சக்திசக்தி சக்தியென்று சிந்து பாடுவோம் - மாய
சக்திதனை வென்றுஅவளின் பாதம் தேடுவோம்!

--கவிநயா

படத்துக்கு நன்றி: தினமலர்


ஹிந்தோளம் ராகத்தில் வெகு பொருத்தமாக அமைத்து அருமையாக பாடித் தந்த சுப்பு தாத்தாவிற்கு நன்றிகள் பல!

4 comments:

  1. /ஓம்சக்தி ஓம்சக்தி என்று பாடுவோம்
    ஓயாமல் அவள்நாமம் என்றும் ஓதுவோம்/

    அழகான வரிகள்

    அவள் நாமம் சொல்ல
    அருகில் வருமா
    அல்லல்கள் எல்லாம்

    ReplyDelete
  2. //அவள் நாமம் சொல்ல
    அருகில் வருமா
    அல்லல்கள் எல்லாம்//

    சின்னக் கவிதையில் பெரிய உண்மை. நன்றி திகழ்!

    நீங்க பின்னூட்டிய பிறகுதான் தாத்தா பாடியதை இட்டேன். மீண்டும் வந்து கேட்டு மகிழுங்கள் :)

    ReplyDelete
  3. 'un sakthi,en sakthi enringillai'
    very true!

    ReplyDelete
  4. வாங்க லலிதாம்மா. நன்றி :)

    ReplyDelete