Monday, May 23, 2011

நீ என்றன் அன்னையன்றோ?



கணந்தோறும் உன்னைக் கருத்துடன் பூஜித்தேன்
கருணை கொஞ்சம் வைப்பாய் நீ
மனம் காட்டுகின்ற மாயைகள் நம்பாமல்
உன்னை நம்ப வைப்பாய் நீ

கரடு முரடான என்றன் மனதினைச்
செப்பனிட்டு வைத்தேன் நான்
குறைகள் இருந்தாலும் பொறுத்துக் கொள்ள வேணும்
தங்க மனத் தாயே நீ

சிரமம் பாராமல் சிங்கத்தை விடுத்து
என் மனம் குடிபுகுவாய்
காணாத வினைகளும் தானாக ஓடிடுமே
உன் முகம் கண்டதுமே

எத்தனை பிழைகள் நான் செய்தாலென்ன
நான் உன்றன் பிள்ளையன்றோ
மன்னித்து உன்னடி சேர்த்துக் கொள்ள வேணும்
நீ யென்றன் அன்னையன்றோ?

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/arunar/2777658592/

6 comments:

  1. கண்டிப்பாக‌
    பிள்ளையின் குரல் கேட்டு
    பிழை பொறுத்துக் கொள்வாள்
    அன்னை

    ReplyDelete
  2. நன்றி திகழ் :)

    ReplyDelete
  3. "என்னை இவ்வுலகிலே பிறக்கவைத்தது உந்தன்

    மாபெரும் பிழையல்லவா?

    உன் பிழைக்குப் பொறுப்பேற்று என்னைக் கடை தேற்றுவதும்

    உந்தன் பொறுப்பல்லவா?"



    பொறுப்பை அவள்மேல் போட்டாச்சு;இனிமே ஹாய்யா இருக்கப்போறேன்!

    ReplyDelete
  4. வாங்க லலிதாம்மா!

    ReplyDelete
  5. //எத்தனை பிழைகள் நான் செய்தாலென்ன
    நான் உன்றன் பிள்ளையன்றோ
    மன்னித்து உன்னடி சேர்த்துக் கொள்ள வேணும்
    நீ யென்றன் அன்னையன்றோ?// beautiful lines akka.. :)

    ReplyDelete
  6. நன்றி சங்கர்!

    ReplyDelete