Monday, December 19, 2011
தேவதையே அருள்வாயோ?
சுப்பு தாத்தா நீலாம்பரியில் பாடித் தந்திருப்பதை ரசித்துக் கொண்டே வாசியுங்கள்... மிக்க நன்றி தாத்தா!
அன்பாலே பாடுகிறேன்
அம்மா உனக்கு பாடல் ஒன்று
என்பாலே அன்புகொண்டு
நீயும் வர வேண்டுமென்று...
கண் ணசையக் காத்திருக்கேன்
கண்ணெடுத்துப் பாராயோ
விண்ணவருக் கிரங்கினையே
உன்மகளுக் கிரங்காயோ?
உன்நினைவே என்மனதுக்
குணவாக ஆச்சுதடி
உன்பெயரே என்சுவாசக்
காற்றாக வீசுதடி!
காணுகின்ற பொருளிலெல்லாம்
கன்னி முகமேதோணுதடி
ஓடிவரும் ஒலியிலெல்லாம்
கொலுசொலியே ஒலிக்குதடி
பாடிப்பாடி அழைக்கின்றேன்
ஓடோடிநீ வருவாயோ
தேடித்தேடித் தவிக்கின்றேன்
தேவதையே அருள்வாயோ?
--கவிநயா
Subscribe to:
Post Comments (Atom)
காணுகின்ற பொருளிலெல்லாம்
ReplyDeleteகன்னி முகமேதோணுதடி
ஓடிவரும் ஒலியிலெல்லாம்
கொலுசொலியே ஒலிக்குதடி
அன்பால் ஆக்கிய அருமையான
அருள் பாக்களுக்குப் பாராட்டுக்கள்..
http://youtu.be/wXVk5GNssI4
ReplyDeleteSUBBU RATHINAM
http://menakasury.blogspot.com
மிகவும் நன்றி, இராஜராஜேஸ்வரி.
ReplyDeleteஇடுகையிலும் சேர்த்திருக்கிறேன், சுப்பு தாத்தா. நீலாம்பரி அருமையாக இருக்கிறது. மிகவும் நன்றி.
ReplyDeletemeena,
ReplyDeleteyr song is wonderful; subbu sir's
neelambari is perfect fr the song!
thank both!!
அக்கா. நல்லா இருக்கு பாடல். பாடி இடுகையில இணைச்சிருக்கேன்.
ReplyDeleteநன்றி லலிதாம்மா!
ReplyDeleteமிக அருமை, குமரன்! மிக்க நன்றி :)
ReplyDeleteநன்றி அக்கா.
ReplyDelete