Monday, December 5, 2011

என் தொழில்!



உன்பதம் போற்றுவதே என் தொழிலாகும்
பொன்பதம் போற்றுதலில் என் னுயிர்வாழும்

திருப்பதந் தனைப் பணிந்தால் தீவினை தீரும்
விருப்புடன் உனைத் தொழுதால் வேதனை மாறும்

மலர்ப்பதம் தனைச்சூட மணமெங்கும் சூழும்
சிலிர்த்துசெந் தமிழ்ப்பாவும் சுனையென ஊறும்
களித்துன்றன் செவியந்த இசையினை மாந்தும்
சிரித்துன்றன் சதங்கைகள் அதற்கிசைந் தாடும்!


--கவிநயா

2 comments:

  1. "சிலிர்த்துசெந் தமிழ்ப்பாவும் சுனையென ஊறும்"

    சாதா சுனையா இது?தேன்சுனை!!



    நன்றாக ஆடவைத்தவளை(ஆட்டிவைப்பவளை?) அருமையாப்பாடிட்டே!

    ReplyDelete
  2. //சாதா சுனையா இது?தேன்சுனை!!//

    ஆஹா, அப்படியா சொல்றீங்க :)

    //நன்றாக ஆடவைத்தவளை(ஆட்டிவைப்பவளை?) அருமையாப்பாடிட்டே!//

    நன்றி அம்மா :)

    ReplyDelete