எப்பொழுதும் உன்நினைவாய் இருக்க வேண்டுமே – அம்மா
தப்பாமல் உன்பெயர்உச் சரிக்க வேண்டுமே
முப்பொழுதும் உன்னடிகள் துதிக்க வேண்டுமே - ஒரு
கணப்பொழுதும் உனைமறவா திருக்க வேண்டுமே
பிச்சையென ஒருவரம்நீ கொடுக்க வேண்டுமே – எந்தன்
இச்சையெல்லாம் நீயாக இருக்க வேண்டுமே
துச்சமென இவ்வுலகை நினைக்க வேண்டுமே – அம்மா
மெச்சியுந்தன் புகழைதினம் படிக்க வேண்டுமே
இன்பதுன்பம் இரண்டுமொன்றாய் கொள்ள வேண்டுமே - அம்மா
உண்மைஇன்பம் நீயெனவே உணர வேண்டுமே
பக்திகொண்டு சக்திதன்னை பாட வேண்டுமே – அம்மா
சக்திமீது பித்துகொண்டு வாழ வேண்டுமே!
--கவிநயா
காண்பதிலெல்லாம் நீ தெரிய வேண்டுமே ..செவி
ReplyDeleteகேட்பதெல்லாம் உன்துதியாய் ஒலிக்கவேண்டுமே .
தாயுன் நினைவில் என்னை மறக்க வேண்டுமே.. அம்மா!
என்னுள்ளும் உன்போல் அன்பு சுரக்கவேண்டுமே .
அருமையான பாட்டு.
ReplyDeleteஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
கற்பூர நாயகியே கனகவல்லி பாடலில் இந்த வரிகளெல்லாம் இருப்பது இது வரை தெரியாமல் போய்விட்டதே! :-)
ReplyDeleteநல்லா சொன்னீங்க லலிதாம்மா. நன்றி :)
ReplyDelete//Rathnavel said...
ReplyDeleteஅருமையான பாட்டு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.//
மிக்க நன்றி ஐயா.
முகநூல்னா என்னன்னு கொஞ்ச நேரத்துக்கு புரியலை! பிறகுதான் 'facebook'னு உறைச்சது :) எனக்கு account இல்லை; பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.
//கற்பூர நாயகியே கனகவல்லி பாடலில் இந்த வரிகளெல்லாம் இருப்பது இது வரை தெரியாமல் போய்விட்டதே! :-)//
ReplyDeleteஆமால்ல? பல சமயம், என்ன பாட்டுன்னே தெரியாம ஏதாவது ஒரு மெட்டு உள்ள ஓடிக்கிட்டிருக்கும், அதே மெட்டில் எழுதிடுவேன். அப்படி அமைந்ததுதான் இதுவும். நீங்க சொன்ன பிறகுதான் realize பண்றேன்!
வாசித்தமைக்கு மிக்க நன்றி குமரா.