Monday, January 9, 2012
சாரமெல்லாம் நீயே!
சுப்பு தாத்தா சுகமாகப் பாடித் தந்ததை கேட்டுக் கொண்டே வாசியுங்கள். மிக்க நன்றி தாத்தா!
பாரமெல்லாம் இறக்கி வைக்க பாதங்களைத் தேடி வந்தேன்
சாரமெல்லாம் நீயே யென்று சத்தியமாய் கண்டு கொண்டேன்
சின்னஞ்சிறு மருங்கினிலே செய்யப்பட்டு அணிந்தவளே
கன்னங்கருங் கூந்தலிலே கார்முகிலைக் கொண்டவளே
பென்னம்பெரும் விழிகளினால் பேரருளைப் பொழிபவளே
மின்னலெழிற் புன்னகையால் உள்ளங்களைக் கவர்பவளே
தாமரைப்பூப் பாதங்கள் தரணியெல்லாம் காக்கும்
வந்தவரை வணங்குவரை வாஞ்சையுடன் வாழவைக்கும்
அம்மாவென் றழுதுநின்றால் ஆதரவாய் அணைக்கும்
அன்பாகத் தொழுதுநின்றால் அஞ்சலென்றே உரைக்கும்!
--கவிநயா
படத்துக்கு நன்றி: https://picasaweb.google.com/lh/photo/TkGO9ypT4gpeACkZhet5UA
Subscribe to:
Post Comments (Atom)
http://youtu.be/IJNTNT0sn60
ReplyDeleteiniya paadal ithu.
inge vanthu kezhungal.
subbu thatha
http://youtu.be/IJNTNT0sn60
ReplyDeleteiniya paadal ithu.
inge vanthu kezhungal.
subbu thatha
அருமை.
ReplyDeleteநன்றி.
//http://youtu.be/IJNTNT0sn60
ReplyDeleteiniya paadal ithu.
inge vanthu kezhungal.//
அம்மா மடி மாதிரி சுகமாக இருந்தது தாத்தா :) மிக்க நன்றி.
//Blogger Rathnavel said...
ReplyDeleteஅருமை.//
மிக்க நன்றி ஐயா.