Monday, January 16, 2012

இன்றென்ன செய்தாய் என் மனமே?


சுப்பு தாத்தா சஹானாவில் பாடித் தந்திருக்கிறார். மிகவும் நன்றி தாத்தா!

இன்றும் சூரியன் மறைந்து விட்டது;
இன்னொரு நாளும் முடிந்து விட்டது...
இன்றென்ன செய்தாய் என்மனமே?
கன்றெனக் கரைவாய் அவளிடமே!

பொழுதும் போகுது புவியும் சுற்றுது;
பிறவியும் நீளுது தினந்தினமே...
இன்றென்ன செய்தாய் என்மனமே?
கன்றெனக் கரைவாய் அவளிடமே!

காலம் கடக்குது நேரம் பறக்குது;
கொடுவினை சேருது தினந்தினமே...
இன்றென்ன செய்தாய் என்மனமே?
கன்றெனக் கரைவாய் அவளிடமே!

நாளும் கோளும் உனக்காக
காத்திருக்காது எப்போதும்...
வேளை வந்துன்னைச் சேரும் முன்னே
விரைந்தே பற்றிடு அவள் பதமே!


--கவிநயா

2 comments:

  1. "அம்மா,அம்மா,அம்மா!"என்றவளை
    கன்றென அழைப்பாய் என்மனமே!

    முன்வினைஆயினும்எவ்வினையாயினும்

    மன்னித்திடும் அவள் தாய்மனமே!

    ReplyDelete
  2. வாங்க லலிதாம்மா!

    ReplyDelete