Monday, January 23, 2012

எங்கும் எதிலும் உன்றன் மாயே!



அம்மா நீயே என்றன் தாயே!
எங்கும் எதிலும் உன்றன் மாயே!

மாயை மயக்கம் நீக்குவாயே!
தாயே கலக்கம் போக்குவாயே!
சேயே என்று அணைத்தென் தாயே!
காயம் யாவும் ஆற்றுவாயே!

பொன்னார் மேனி பகிர்ந்த தாயே!
மின்னார் மெலிந்த இடை கொண்டாயே!
பண்ணால் உன்னைப் பாடும் பெண்ணை
கண்ணால் காத்து அருள் செய்வாயே!!

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.trinethram-divine.com/2011/10/menakshi-as-ardhanariswarar.html#.Tx4QMYF0pGM

8 comments:

  1. சேயே என்று அணைத்தென் தாயே!
    காயம் யாவும் ஆற்றுவாயே!/

    காயம் பட்டுக்கலங்கும் வேளையில்
    மாயமாய் வந்து ஆறுதலாய் கவிதை!

    நன்றி..

    ReplyDelete
  2. சுப்பு ஐயாவின் குரலில் பாட்டைக்கேட்டு ரசித்தேன்;அம்மா நம்மைத் தடவிக்கொடுத்து ஆறுதல் சொல்வதுபோல் இதம்ம்மா இருக்கு !

    ReplyDelete
  3. //இராஜராஜேஸ்வரி said...

    காயம் பட்டுக்கலங்கும் வேளையில்
    மாயமாய் வந்து ஆறுதலாய் கவிதை!//

    நல்லது அம்மா. அன்னை துணையிருப்பாள். வாசித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. //Madam Kavinaya's masterpiece. you may listen to this song in Raag Durbari kanada here.

    subbu thatha//

    எல்லா பாட்டும் எழுதறது போலத்தான் எழுதினேன். எதனால இப்படிச் சொல்றீங்கன்னு தெரிஞ்சுக்க ஆவல் தாத்தா :)

    நீங்கள் பாடியிருப்பது மிக அருமை. பல முறை கேட்டேன், மனம் உருக. மிகவும் நன்றி தாத்தா.

    ReplyDelete
  5. //சுப்பு ஐயாவின் குரலில் பாட்டைக்கேட்டு ரசித்தேன்;அம்மா நம்மைத் தடவிக்கொடுத்து ஆறுதல் சொல்வதுபோல் இதம்ம்மா இருக்கு !//

    வாங்க லலிதாம்மா. சரியாச் சொன்னீங்க! நன்றி அம்மா.

    ReplyDelete
  6. //பொன்னார் மேனி பகிர்ந்த தாயே!//

    என்பதற்கு அர்த்தநாரீஸ்வரர் படம் அருமை

    ReplyDelete
  7. //பொன்னார் மேனி பகிர்ந்த தாயே!//

    என்பதற்கு அர்த்தநாரீஸ்வரர் படம் அருமை//

    சரியே. அதற்குத்தான் அந்தப் படம் இட்டேன். மிக்க நன்றி கைலாஷி.

    ReplyDelete