Monday, March 19, 2012

கனக தாரை - 4,5,6

Devi Lakshmi e Vishnu

சுப்பு தாத்தா ஆனந்த பைரவியில் பாடியிருப்பதைக் கேட்டுக் கொண்டே வாசியுங்கள். மிக்க நன்றி தாத்தா!

4.
பா(3)ஹ்வந்தரே முரஜித: ச்(ஹ்)ரிதகௌஸ்துபே(4) யா
ஹாராவளீவ ஹரிநீலமயீ விபா(4)தி
காமப்ரதா(3) ப(4)க(3)வதோ(அ)பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா


கௌஸ்துபம் என்னும் மணியை மார்பினில் அணிந்த மாயன்
மதுவென்னும் அரக்கன் தன்னை வதைத்தவன் மகிழும் வண்ணம்
மரகத மேனியின் மேலே மற்றொரு மாலை போலே
இந்திர நீல ஜாலம் காட்டிடும் உன்றன் பார்வை
கொஞ்சமே கொஞ்சம் என்மேல் கனிவுடன் பட்டால் கூட
கற்பனைக் கெட்டா பேறால் களிப்பேன்நான் கமலத் தாயே!



5.
காலாம்பு(3)தாளி லலிதோரஸி கைடபா(4)ரே:
தா(4)ராத(4)ரே ஸ்புரதி யா தடி(3)த(3)ங்க(3)னேவ
மாதுஸ்ஸமஸ்த ஜக(3)தாம் மஹனீய மூர்தி:
ப(4)த்(3)ராணி மே தி(3)ச(H)து பா(4)ர்க(3)வ நந்த(3)னாயா:



கைடப அரக்கன் தலையைக் கொய்தசக் ராயுத பாணி
சாமள வண்ணப் பரந் தாமனின் மார்பின் மேலே
கருத்திட்ட மேகத் திரளில் தெறித்திட்ட மின்னல் போலே
ஒளிர்ந் திட்டாய் பிருகு வம்சம் பிறந்திட்ட அன்புத் தாயே
அகிலத்தின் அன்னை உன்றன் எழில்விழி என்மேல் பட்டால்
இகபரச் சுகங்கள் யாவும் இன்றேநான் கொள்வேன் தாயே!


6.
ப்ராப்தம் பத(3)ம் ப்ரதமத: கலுயத் ப்ரபா(4)வாத்
மாங்கல்யபா(4)ஜி மது(4)மாதினி மன்மதேன
மய்யாபதேத் ததி(3)ஹ மந்தரம் ஈக்ஷணார்த(4)ம்
மந்தா(3)லஸம் ச மகராலய கன்யகாயா:


போர்க்கணை தொடுத்த அரக்கனைப் புறமிடச்செய் தோன்மீது
மலர்க்கணை தொடுத்து எளிதாய் மாரனும் வென்றது உன்றன்
நிகரில்லாக் காதல் பொங்கும் நீள்விழி துணையால் அன்றோ
நேயத்தால் நெகிழ்ந்து நோக்கும் நங்கையுன் விழிகள் தம்மின்
கடைவிழிப் பார்வை யேனும் கடையன்மேல் பட்டால் போதும்
அளவிலாச் செல்வம் பெற்று அவனியில் உய்வேன் தாயே!


--கவிநயா

(தொடரும்)

4 comments:

  1. அமிர்தமாய் வர்ஷிக்கும் ஆனந்தப் பாட்டு.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. மிகவும் நன்றி அம்மா.

    ReplyDelete
  3. சுப்பு ஐயாவின் பாட்டுக்காக காத்திருந்தேன் ;இப்பத்தான் கேட்டு ரசித்தேன் ;

    late?

    ReplyDelete
  4. நன்றி லலிதாம்மா. சுப்பு தாத்தா அனுப்பிய பிறகும் போடறதுக்கு எனக்கு இன்னும் ரெண்டு நாள் ஆயிடுச்சு. காத்திருந்து கேட்டதற்கு மிக்க நன்றி அம்மா.

    ReplyDelete