Monday, March 12, 2012

கனக தாரை

மு.கு.: சென்ற நவராத்திரியின் போது "நினைவின் விளிம்பில்" எழுதிய கனகதாராவின் தமிழ் ஆக்கம், அடுத்த சில வாரங்களுக்கு இங்கே...

ஓம் கம் கணபதயே நம:


கனகதாரா ஸ்தோத்திரம், தமிழில்...


சுப்பு தாத்தா ஆனந்த பைரவியில் அற்புதமாகப் பாடியிருப்பதை இங்கே கேட்கலாம்! மிகவும் நன்றி தாத்தா.

1.
அங்க(3)ம் ஹரே: புளக பூ(4)ஷணம் ஆச்(H)ரயந்தீ
ப்(3)ருங்கா(3)ங்க(3)னேவ முகுளாப(4)ரணம் தமாலம்
அங்கீ(3)க்ருதாகில விபூ(4)தி: அபாங்க(3)லீலா
மாங்க(3)ல்யதா(3)ஸ்து மம மங்கள தே(3)வதாயா:


ஆனந்தத் தேவி நீயே அணியாக மார்பில் மின்ன
அதனாலே அங்கம் எல்லாம் இன்பத்தில் பொங்கித் ததும்பும்
தமால மலரை யொத்த மாலவன் மேனி தன்னை
மையலால் மகிழ்ந்து நோக்கும் பொன்வண்டை யொத்த விழிகள்
சற்றே திசைமாறி என்மேல் தொட்டுச்சென் றாலும்கூட
செல்வங்கள் யாவும் பெற்று சகத்திலே உய்வேன் தாயே!

2.
முக்தா(4) முஹுர் வித(3)த(4)தீ வத(3)னே முராரே:
ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி க(3)தாக(3)தானி
மாலா த்(3)ருசோ(H)ர் மது(4)கரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸச்(H)ரியம் தி(3)ச(H)து சாக(3ரஸம்ப(4)வாய


நீலத்தா மரையின் மேலே பாகொக்கும் தேனைப் பருக
தரிகெட்டு அலைந்து திரியும் தேனீக்கள் போலே தாமும்
நாணத்தால் தயங்கிப் பின்னர் நெஞ்சத்தின் காதல் மீற
முராரி முகத்தின் எழிலைப் பருகும்உன் விழியிரண்டும்
நேயத்தால் சற்றே என்மேல் நிலைத்திடு மாயின் நானும்
பாக்கியம் செய்தே னாவேன் பாற்கடல் பிறந்த தாயே!

3.
ஆமீலிதாக்ஷ மதி(4)க(3)ம்ய முதா(3) முகுந்த(3)ம்
ஆனந்த(3)கந்த(3) மனிமேஷ-மனங்கதந்த்ரம்
ஆகேகரஸ்தித கனீநிக பக்ஷ்ம நேத்ரம்
பூ(4)த்யை ப(4)வேன்மம பு(4)ஜங்க(3) ச(H)யாங்க(3)னாயா:


பாதியாய் மூடித் திறந்த விழிகளால் தலைவன் தன்னை
பார்த்தும்பா ராதது போலே பார்க்கின்ற பத்தினிப் பெண்போல்
பிரியமும் ஆசையும் கூட நாணமும் அதனுடன் சேர
பாம்பணை மீதில் துயிலும் முகுந்தனை நோக்கும் விழியை
சாடையாய் என்றன் மேலே சற்றேவைத் தாலும்கூட
பொழிகின்ற செல்வத்தாலே பொலிவுற்று வாழ்வேன் தாயே!


--கவிநயா

(தொடரும்)

6 comments:

  1. kanaka dhaara
    I recollect u had already done this one. Tomorrow being kaaradayan nombu, and this prayer suits the occasion, I sing this in Raag Anandha Bhairavi
    subbu rathinam

    ReplyDelete
  2. கண்ல தண்ணி வந்திடுச்சு தாத்தா. அற்புதமாகப் பாடியிருக்கீங்க.

    //I recollect u had already done this one.//

    ஆமாம், போன நவராத்திரியின் போது என்னுடைய வலைப்பூவில் இட்டிருந்தேன்.

    //Tomorrow being kaaradayan nombu, and this prayer suits the occasion//

    இதனை இந்த சமயத்தில் இங்கே இடணும்னு தோணியதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்னு நினைச்சேன். சரியாயிடுச்சு. அவளருளாலே அவள் தாள் வணங்கி...

    மிகவும் நன்றி தாத்தா.

    ReplyDelete
  3. i chant kanakadhara slogam daily;but ,to read this in kavinaya's style of thamizh is
    something very special!to hear the same in subbu sir's voice full of devotion is simply fantastic!!
    thanks both!!

    ReplyDelete
  4. அன்புக்கு மிகவும் நன்றி லலிதாம்மா.

    ReplyDelete
  5. தங்கமான ஆக்கம். பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

    ReplyDelete