சுப்பு தாத்தா த்வஜவந்தி ராகத்தில் அருமையாகப் பாடித் தந்ததைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!
எத்தனையோ நாளாக உன்னை நினைத்தேன்
– சிவ
பத்தினியே உன்னைஎன் நெஞ்சில்
பதித்தேன்
சித்தமெல்லாம் நிறைந்தென்னை ஆட்கொண்டாயே
நித்தமுன்னை துதித்திடவே அருள்
செய்தாயே!
காலமெலாம் காலடியில் கிடந்திட
வேண்டும்
கற்பகமே உன்புகழே பேசிட வேண்டும்
கணப்பொழுதும் விலகாமல் நினைந்திட
வேண்டும்
கனிவுமிகும் உன்பார்வை என்மேல்
வேண்டும்!
அம்மாஎன் றழைத்தாலே அமு தூறுமே
ஆசையுடன் உனைப்பாடத் தமிழ் வாழுமே
நேசமுடன் நினைத்தாலே நிலை மாறுமே
– உன்
வாசமலர்ப் பாதம்என் புக லாகுமே!
--கவிநயா
அருமை...
ReplyDeleteகாலமெலாம் காலடியில் கிடந்திட வேண்டும்
ReplyDeleteகற்பகமே உன்புகழே பேசிட வேண்டும்
அம்மாஎன் றழைத்தாலே அமு தூறுமே
ஆசையுடன் உனைப்பாடத் தமிழ் வாழுமே
அற்புதமான வரிகள் கவிநயாக்கா!
உங்களின் கவிதை வரிகள் மட்டுமல்ல comments கூட அம்மாவிடம்
உள்ள சுயநலமில்லாத அன்பை வெளிப்படுத்துகிறது.
வாருங்கள் தனபாலன். நன்றி :)
ReplyDeleteவாருங்கள், Sylan. உங்கள் பெயரைத் தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை... உங்கள் ரசனையும் புரிதலும் மகிழ்ச்சி அளிக்கிறது :) முன்பு இட்ட பாடல்களையும் (பின்னூட்டங்களையும்) கூட வாசிக்கிறீர்கள் என்று தெரிகிறது. மிகவும் நன்றி! :)
ReplyDeleteதமிழில் ஷைலன்
ReplyDeleteநல்லது ஷைலன் :) நன்றி!
ReplyDelete"அம்மாஎன்றழைத்தாலே அமுதூறுமே"
ReplyDeleteஎனக்கு ரொம்பப் பிடித்த வரி .
நன்றி லலிதாம்மா! எனக்கும் :)
ReplyDeletemiga arumaiyaana varigal!
ReplyDeleteNatarajan.