இருகரங் கூப்பி இதயத்தின் நன்றியைப்
பதகமலம் வைத்தேன்!
பரமனின் இடப்புறம் இருப்பவளே
உன்னை இதயத்திலே வைத்தேன்!
அகிலம் எல்லாம் ஆள்பவளே எழு புவனம்
ஆளும் ஈஸ்வரியே!
விகிதம் இல்லா அன்பாலே… எனையாளும்
பர மேஸ்வரியே!
பகலிலும் இரவிலும் பாதிப் பொழுதிலும்
நீயே என்றன் துணையம்மா!
இகத்திலும் பரத்திலும் ஒவ்வொரு
இடத்திலும் நீயே என்றன் சுகமம்மா!
அண்டம் யாவும் படைத்தல் முதலாய்
ஐந்தொழிலும் நீ செய்வாயே!
பிண்டந் தன்னில் குண்டலியாகச்
சுருண்டு கொண்டு துயில்வாயே!
கண்டங் கறுத்த கண்ணுத லானுடன்
கைலாயத்தில் உறைவாயே!
கண்டவர் வியந்திட விண்டவர் வணங்கிட
கண்ணால் நீயும் அருள்வாயே!
கன்னல் பூவே, செந்தேனே… கவிதை
பாடத் தந்தாயே!
மின்னல் கொடியே, செம்பூவே… உன்னைப்
பாடத் தந்தாயே!
அமுதம் உன்னை அன்பால் பாட அமிழ்தாம்
தமிழைத் தந்தாயே!
குமுதம் உன்னைக் கனிவாய்ப் பாடக்
கனியாம் தமிழைத் தந்தாயே!!
--கவிநயா
நன்று...
ReplyDeleteஉயிரொலிதனிலே உறைபவளே !துயிலும் அரங்கனுக்கிளையவளே!
ReplyDeleteகயிலைநாதனைக் கூடிடவே மயில்வடிவெடுத்த மலைமகளே!
காழிச்சேய்க்குப் பாலூட்டி
கவிமழை பொழியச் செய்தவளே!
யாழைப்பழிக்கும்மொழியாளே !ஏழையேன்வாழ்த்தையும்ஏற்றுக்கொள்வாய்!
This comment has been removed by the author.
ReplyDeleteநன்றி திரு.தனபாலன் :)
ReplyDeleteலலிதாம்மா. உங்க வரிகள் கொள்ளை அழகா இருக்கு! நன்றி அம்மா!
ReplyDelete