Monday, March 4, 2013

மேகம் சொன்ன சேதி...




சுப்பு தாத்தா ஷண்முகப்ரியா ராகத்தில் இனிமையாகப் பாடியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!

 
ஓடி வந்த மேகம் ஒன்று சேதி சொன்னது
ஓடம் இந்த வாழ்வில் உன்றன் நாமம் என்றது
பாடம் இதனைக் கற்றுக் கொண்டால் போதும் என்றது
தேடும் யாவும் நம்மை வந்து நாடும் என்றது

நீரைச் சுமந்து அலையும் என்னைப் பாரேன் என்றது
சுமையை இறக்க மழையைப் பொழிந்தால் போதும் என்றது
கவலை களைச் சுமந்து வாழ்வ தேனோ என்றது
அன்பைப் பொழிந்து வாழ்ந்து விட்டால் போதும் என்றது

காடும் மேடும் யாவும் ஒன்றுதானே என்றது
வாழ்வும் தாழ்வும் எல்லாம் ஒன்றுதானே என்றது
அன்னை யுன்றன் பாதத் தூளி போதும் என்றது
உண்மை உணர்ந்த பின்னே அமைதி சூழும் என்றது!


--கவிநயா

11 comments:

  1. /* காடும் மேடும் யாவும் ஒன்றுதானே என்றது
    வாழ்வும் தாழ்வும் எல்லாம் ஒன்றுதானே என்றது */

    என்னவோ போங்கோ ஒண்டும் புரியமாட்டேன்குது!

    ReplyDelete
  2. ஒவ்வொரு வரியும் சிந்திக்க வேண்டிய வரிகள்... அருமை...

    ReplyDelete
  3. மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்!


    "அன்னை யுன்றன் பாதத் தூளி போதும்" என்ற சேதியைப்
    புரிந்துகொண்டால் போதும் .

    "காடும்மேடும்யாவும்ஒன்று","வாழ்வும் தாழ்வும் எல்லாம் ஒன்று"
    எனும் சேதிகளை அன்னையின் பாததூளி நமக்குப்புரியவைத்துவிடும்!

    ReplyDelete
  4. புரிந்துகொண்டேன் அம்மா , நன்றி !

    ReplyDelete
  5. ஷைலன், லலிதாம்மா சொன்னதைக் கேட்டதும் புரிஞ்சிடுச்சு போல :) வாசிச்சதுக்கு நன்றிப்பா.

    ReplyDelete
  6. மிகவும் நன்றி தனபாலன்! :)

    ReplyDelete
  7. மிக்க நன்றி லலிதாம்மா!

    ReplyDelete
  8. சுப்புத் தாத்தா பாடலை இணைத்திருக்கிறேன், கேட்டு மகிழுங்கள்!

    ReplyDelete
  9. மீண்டும் வந்து சுப்புசார் பாடியதைக் கேட்டு ரசித்தேன்

    ReplyDelete
  10. நன்றி லலிதாம்மா. நீங்கள் கேட்பீர்கள் என்று தெரியும் :)

    ReplyDelete
  11. என்னவென்று சொல்ல
    அருமை

    நன்றிகள்

    ReplyDelete