சுப்பு தாத்தா ரேவதி ராகத்தில் பாடி அசத்தியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!
அழகு மலர்ப் பாதம் காணக் கோடிக் கோடிக் கண்வேண்டும்
குழைந் ததனைத் தமிழில் பாடக்
கோடிக் கோடிப் பண் வேண்டும்
அரு மறைகள் ஓதும் நல்ல மாத வர்களும்
கொண்டாடும்
திருப் பதங்கள் பணிந்து விட்டால்
தீ வினைகளும் திண்டாடும்!
விண் ணவரைக் காக்க வென்று விரைந்
திரங்கி வந்தவளே
கண் ணெழிலால் கணப் பொழுதில் காமே
சனையும் வென்றவளே
பண்டா சுரனை வதைத் திடவே பதின்மளா
யுதித்தவளே
கண்டோ ரெல்லாம் வியந் திடவே சிதக்
னியில் பூத்தவளே!
பிரம்மா, விஷ்ணு, ருத்ரனோடு ஈசன்
சதா சிவனென்ற
பஞ்ச பிரம்மாக் களையும் தமது
மஞ்சமாகக் கொண்டவளே
பஞ்ச பிரம்ம வடிவாகி ஐந் தொழிலும்
செய்பவளே
அஞ்ஞான மெனும் பஞ்சம் நீக்கித்
தஞ்சம் தரும் தூயவளே!
அலை மகளும் கலை மகளும் சாம ரங்கள்
வீசிடவே
முனிவர் களும் தேவர் களும் பாதம் பணிந்து போற்றிடவே
கரத்தி லுள்ள கரும்பைப் போலக்
கனிந்த மனம் கொண்டவளே
சிரத்தி லுன்றன் பாதம் வைத்து
அருள வேண்டும் தேவியளே!!
--கவிநயா
படத்துக்கு நன்றி: ஷைலன்
--கவிநயா
படத்துக்கு நன்றி: ஷைலன்
ரெம்ப ரெம்ப நல்லா இருக்கு அக்கா . அப்படியே அம்மாவை வர்ணித்து இருக்கிறிங்க . ரெம்ப ரெம்ப ரெம்ப நன்றி!
ReplyDeleteவரிகள் மிகவும் சிறப்பு...
ReplyDeleteஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தின் ஆரம்ப வரிகளின் சாரத்தை அற்புதமாகத் தமிழில் கொடுத்திருக்கிறீர்கள் (சிதக்னி குண்ட சம்பூதா...). வியப்பாகவும் அற்புதமாகவும் இருக்கிறது. மிக அருமை. மிக்க நன்றி.
ReplyDelete//ரெம்ப ரெம்ப நல்லா இருக்கு அக்கா . அப்படியே அம்மாவை வர்ணித்து இருக்கிறிங்க//
ReplyDeleteஉங்களுக்குப் பிடிச்சதில் மகிழ்ச்சி, ஷைலன்! நீங்கதானே வரிகள் எடுத்துக் கொடுத்தீங்க! ரொம்ப நன்றிப்பா.
//வரிகள் மிகவும் சிறப்பு...//
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன்!
//ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தின் ஆரம்ப வரிகளின் சாரத்தை அற்புதமாகத் தமிழில் கொடுத்திருக்கிறீர்கள் (சிதக்னி குண்ட சம்பூதா...). வியப்பாகவும் அற்புதமாகவும் இருக்கிறது.//
ReplyDeleteமிக்க நன்றி பார்வதி. இந்தப் பாடலுக்கு ஷைலன்தான் இங்கே பிள்ளையார் சுழி போட்டார் :)
/* நீங்கதானே வரிகள் எடுத்துக் கொடுத்தீங்க! ரொம்ப நன்றிப்பா. */
ReplyDeleteநான் just இந்த concept புகுத்துங்கள் என்று தான் சொன்னேன் நீங்க கலக்கிடிங்க. நான் ஒத்துகிட்டாலும் ஒத்துகிடாட்டாலும் அம்மாவின் அருள் அருள் நிறைந்த செல்லப்பிள்ளை தான் நீங்க. எதை கொடுத்தாலும் அசத்திடுவிங்கள்.
நன்றி:
ReplyDelete1) ஷைலனுக்கு (ஐடியா அளித்ததற்கு )
2)கவிநயாவுக்கு (கவிதைமூலம் லலிதா திருபுரசுந்தரி அன்னையை
கண்முன்னே காட்டியதற்கு )
3)சுப்புசாருக்கு (அருமையாப்பாடிக் கொடுத்ததற்கு)
//எதை கொடுத்தாலும் அசத்திடுவிங்கள்.//
ReplyDeleteஒவ்வொரு முறை எழுதும் போதும், அவள்தான் இதைத் தந்திருக்கிறாள், நாம ஒரு கருவி மட்டுமேன்னு திரும்பத் திரும்ப நினைவு படுத்திக்கிறேன்... அவளருளாலே அவள் தாள் வணங்கி... நன்றிப்பா.
நன்றி லலிதாம்மா!
ReplyDeleteமன்னிச்சுக்கோங்க ஷைலன், உடனே பதில் எழுதலைன்னா அப்படியே விட்டுப் போயிடுது...
ReplyDelete//நான் ஒத்துகிட்டாலும் ஒத்துகிடாட்டாலும் அம்மாவின் அருள் அருள் நிறைந்த செல்லப்பிள்ளை தான் நீங்க.//
உங்களுக்குப் பெரிய மனசு இல்லைன்னு முன்ன ஒரு தரம் சொன்னீங்க, ஆனா இவ்ளோ பெரீய்ய மனசா இருக்கே :)
அம்மாவை வணங்கணும்னு எண்ணம் ஏற்படறதுக்கே அவள் அருள் வேணுமாம், பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கணுமாம். அப்படிப் பார்த்தா அவளை நினைக்கிற நாம எல்லாருமே அவளுக்குச் செல்லம்தான் :) உங்க பெருந்தன்மைக்கு நன்றி தம்பீ :)