Monday, April 29, 2013

அச்சம் இல்லை!



சுப்பு தாத்தாவும், இந்த முறை மீனாட்சி பாட்டியும் சேர்ந்து கலக்கியிருக்கிறார்கள்! மிக்க நன்றி தாத்தா, பாட்டீ!



அம்மா நீயென் அருகிருக்க
அச்சம் இல்லை என் மனதில்
உன்றன் கண்ணொளி துணையிருக்க
இருளேதம்மா என் வழியில்?

கனிவாய்ப் புன்னகை காண்கையிலே
கனவாய்ப் போகுது கவலையெல்லாம்
பணிவாய் உன்பதம் பணிகையிலே
பதறிச் சிதறுது வினைகளெல்லாம்!

அபயம் அபயம் என்பவர்க்கு
அபயம் அளித்திடும் உன் கரமே
துயரம் எத்தனை வந்தாலும்
உன்னைத் துதிப்பவர்க் கேன் பயமே?

அம்மா உன்னை நினைத்து விட்டால்
உள்ளம் எல்லாம் உன் வயமே
சிந்தையில் உன்னைப் பதித்து விட்டால்
சித்தம் எல்லாம் சின் மயமே!

--கவிநயா

9 comments:

  1. அருமையான வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கறையுறை பிறைமதிதனை மலராய்ச்
    சிரந்தனில் சூடும் செண்பகமே!
    சரணமே அரணெனச்சரணடைந்தேன்.
    அருள்மழை பொழிவாய் அன்பகமே!

    ReplyDelete
  3. Miga arumai.Nambikkai miga avasiyam!

    ReplyDelete
  4. மிக்க நன்றி தனபாலன்.

    ReplyDelete
  5. அற்புதமான கவிப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அம்மா!

    ReplyDelete
  6. //அம்மா உன்னை நினைத்து விட்டால்
    உள்ளம் எல்லாம் உன் வயமே
    சிந்தையில் உன்னைப் பதித்து விட்டால்
    சித்தம் எல்லாம் சின் மயமே!//

    அற்புதமான வரிகள் .

    ReplyDelete
  7. என்னிக்காவது ஒரு நாளைக்கு திண்டுக்கல் தனபாலன் பாடி,
    அதை இந்த சுப்பு தாத்தா
    அழகான பாடல். அமுதமாய் பாடி இருக்காரே அப்படின்னு
    அருமை அருமை எனச்சொல்லி
    ஆனந்தப்படணும்.

    சுப்பு தாத்தா.
    amma neeyum thunaiyirukka
    naanum paduren ik kavithai.
    amma neeyum thunaiyirukka
    thinamum thuthippathunthan
    padhangalai.
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
  8. நன்றி ஷைலன் :)

    ReplyDelete
  9. எல்லாப் பாடல்களையும் பாடித் தரும் உங்கள் அன்பிற்கு மிக மிக நன்றி தாத்தா!

    ReplyDelete