Monday, June 10, 2013

அறிவு கெட்ட மனமே!




சுப்பு தாத்தா அருமையாகப் பாடியதை நீங்களும் கேளுங்கள். மிக்க நன்றி தாத்தா!


அறிவு கெட்ட மனமே!
திரும்பி வா என் னிடமே!
அழகு மலர்ப் பாதம் விட்டு
அலைவ தென்ன தினமே?

மலத்தில் அமரும் ஈயைப் போல
இருப்ப துனக்கு அழகோ?
மலரில் அமரும் தேனீ போல
இருந்தி டுவாய் மனமே!

வலையில் பட்ட மானைப் போல
மிரளுவ தேன் மனமே?
தலையைப் பாதம் வைத்து விட்டால்
மலையும் கூடக் கடுகே!

உணர்வுகளில் சிக்கிக் கொண்டு
உழல்வது மேன் மனமே?
உணர்ந்து அவளைப் பணிந்து விட்டால்
உலக வாழ்வும் சுகமே!

அர்த்தமில்லா எண்ண மெல்லாம்
எண்ணுவ தேன் மனமே?
அவளை மட்டும் நினைத் திருந்தால்
ஆனந்தம் தான் தினமே!

கடலில் அலையும் அலையைப் போல
அலைவது மேன் மனமே?
கருணைக் கடலை நினைத்து விட்டால்
கால மெல்லாம் சுகமே!


--கவிநயா

8 comments:

  1. அருமை... அலை பாயும் மனதை அடக்க வேண்டும்... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வாங்க தனபாலன். நன்றி!

    ReplyDelete
  3. //வலையில் பட்ட மானைப் போல
    மிரளுவ தேன் மனமே?
    தலையைப் பாதம் வைத்து விட்டால்
    மலையும் கூடக் கடுகே!//

    அழகான வரிகள் .

    (தலையைப் பாதம் வைத்து விட்டால் ) என்பது ( தலையில் பாதம் வைத்து விட்டால் / தலையில் பாதம் பட்டு விட்டால் ) என்பதா?
    ( தலையில் பாதம் பட்டு விட்டால்
    மலையும் கூடக் கடுகே! ) என்பது கூட பொருந்தும் போல் உள்ளது .

    நன்றி அக்கா !

    ReplyDelete
  4. அறிவு கெட்ட மனமே , திரும்பி வா என்னிடமே.!!

    என்பதை விட,

    அறிவிழந்த மனமே,திருந்தி வா என்னிடமே

    என எழுதலாமோ ?

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  5. வாங்க ஷைலன்!

    நம் தலையை அவள் பாதத்தில் வைத்து விட்டால் மலையும் கூடக் கடுகே என்ற பொருளில் எழுதினேன். நாம் / நம் மனம் செய்ய வேண்டிய காரியங்களை நம் நிலையிலிருந்து வைத்து எழுதியதால் அப்படி. அவள் நிலையிலிருந்து எழுதினால் அவள் பாதம் நம் தலையில் பட்டால் என்று வரும். எனினும் நீங்கள் சொல்வதும் பொருத்தமாகவே இருக்கிறது.

    மிகவும் நன்றி தம்பீ!

    ReplyDelete
  6. //அறிவு கெட்ட மனமே , திரும்பி வா என்னிடமே.!!

    என்பதை விட,

    அறிவிழந்த மனமே,திருந்தி வா என்னிடமே

    என எழுதலாமோ ?//

    எழுதலாம் தாத்தா. என் மனசு மேல ரொம்ப கோவமா இருந்ததால, ரொம்பவே திட்டணும் போல இருந்ததால, அந்த வேகம். நீங்க பாடும் எண்ணம் இருந்தால், அப்ப வேணா மாத்திப் பாடிடுங்க :)

    வருகைக்கு நன்றி தாத்தா!

    ReplyDelete
  7. இரசித்தேன்

    வார்த்தை இல்லை
    வாழ்த்த

    இதை விட
    இவ்வளவு அழகாய்
    இயம்ப
    இங்கே யார் உள்ளார்கள்

    ReplyDelete
  8. வாங்க திகழ்! ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் :) ரசிச்சதுக்கு மிக்க நன்றி,

    ReplyDelete