Friday, June 21, 2013

"பாவை விளக்கு" - நீயே கதி ஈஸ்வரி

ரொம்ப நாள் கழிச்சி..... அன்னையின் வீட்டுக்கு வந்திருக்கேன், வெள்ளிக்கிழமை அதுவுமா!

"நீயே கதி ஈஸ்வரி"
- என்ற புகழ் பெற்ற பாடல்; (சினிமாப் பாட்டு தான் - இருந்தாலும் மன்னிச்சிக்கோங்க)

இந்தப் பாடலின் youtube காணொளியில், அன்னையின் அருகே உள்ள "பாவை விளக்கு"களைச் சற்றுக் கவனிச்சிப் பாருங்க;
எங்கள் கிராமத்து வீட்டிலும் இவள் உண்டு; மிக மிக அழகு;

ஆனால் "வீட்டுக்கு ஆகாது", கோயிலில் மட்டும் தான் ஏத்தணும்-ன்னு யாரோ ஒரு கோயில் ஐயர் சொல்லக் கேட்டு.. ஏனோ அம்மா ஏற்றுவதில்லை; வீட்டில் குத்து விளக்கு மட்டுமே;
"அவளைக்" கிராமத்திலேயே "அம்போ" -ன்னு விட்டு வந்துட்டோம்:(

"சக்தி" என்ற உலக அன்னை; அவளை மீறி, வெறும் ஒரு பாவை விளக்கா, என்னை ஆகாமல் செய்து விடும்?
பாதி fuse போன electric குத்து விளக்கெல்லாம் வைக்குறாங்க; தப்பில்லை; ஆனா எழிலார் பாவை விளக்கு??:(

இப்பவும் நியுயார்க்கிலிருந்து கிராமத்துக்குப் போகும் போதெல்லாம் (அ) வீட்டில், அம்மா நோன்பு எடுக்கும் போதெல்லாம் (கேதார கெளரி நோன்பு)... இந்தப் பாவை விளக்கை ஏத்தி வைப்பேன்;
பூசையறையில் தானே வைக்கப்படாது?
புழக்கடைக் கிணற்றடியில், பூவாடைக்காரிக் கல்லு ஒன்னு இருக்கும்; அது பக்கத்துல கொண்டு போய் வச்சிருவேன்;

ஒயிலான உருவத்தைப் பளபள-ன்னு துலக்கி,
மஞ்ச பூசி, திருநீறும்-பொட்டும் வச்சி, அவ தலையில் பூ வச்சி,
அவ கையில் விளக்கேத்தினா... = என் முருகனை விட செம அழகா இருப்பா;

என் மனசுக்கு மிகவும் பிடிச்ச பாவை விளக்கு!
= அதை ஏத்தும் போது, நானே அந்தப் பாவை போல் தோனும்;
= தாயே - நான், உன் கண்ணில் "பாவை" அன்றோ?

நீயே கதி ஈஸ்வரி 
சிவ காமி தயா சாகரி - எனக்கு
(நீயே கதி ஈஸ்வரி)

மாயா உலகிலே ஓயாத துயராலே
வாடாமலே ஒரு வழிகாட்டவே - எனக்கு
(நீயே கதி ஈஸ்வரி)

ஆவியே அமுதே ஆகமப் பொருளே
அன்புடன் தாராயோ உன் திருவருளே

ஆவதும் அழிவதும் யாவும் உன்னாலே
அன்னையே பாராயோ என்னையும் கண்ணாலே

தீயவர் வாழவும் நல்லவர் தாழவும்
செய்வதேனோ? இது தர்மம் தானோ? - அம்பா
(நீயே கதி ஈஸ்வரி)

படம்: அன்னையின் ஆணை
வரிகள்: மருதகாசி
குரல்: பி. லீலா
இசை: SM சுப்பையா நாயுடு (சிங்கார வேலனே தேவா புகழ்..)


பொதுவா, மணமான பெண்கள், புகுந்த வீட்டுக் குறையெல்லாம், அம்மா கிட்ட சொல்லித் தான் ஏங்குவாங்க!
ஆனா... சில "லூசு" பொண்ணுங்களும் ஒலகத்தில் இருக்குதுங்க; அம்மா கிட்ட கூடச், சொல்லாம மறைச்சிருங்க;

ஏன்-ன்னா....
அவனுக்கு = "இழுக்கு" ஆயீறக் கூடாது!
முருகா, நானும் உன்னைப் பத்தி, அம்மா கிட்ட சொல்லப் போறதில்ல;

ஆனாலும்....

இந்தப் பாவை விளக்காப் பேசுறேன்:
அம்மா, உனக்கு  விளக்கேந்தி நிக்குறேனே?
என் வாழ்வுக்கும், ஒரு விளக்கேத்த மாட்டியா?
சிவ - காமி , தயா சாகரி 
எனக்கு ... நீயே... கதி ஈஸ்வரி!


subbu thaatha has sent his song rendering; link = here

3 comments:

 1. இப்பவாச்சும் அம்மா நினைவு வந்துச்சே, இனிமே எல்லாம் அவ பார்த்துப்பா! அழகான பாடலுக்கு நன்றி கண்ணா.

  ReplyDelete
 2. அருமையான பாடல்... ரசனைக்கு வாழ்த்துக்கள்...

  நன்றி...

  ReplyDelete
 3. அருமையான பாடல் பதிவிற்கு, பகிர்விற்கு நன்றி.

  பாவை விளக்கு ஏற்றினால் வீட்டுக்கு ஆகாதா?. எனக்குத் தெரிந்த வரையில், என் நினைவு தெரிந்த நாளிலிருந்து கார்த்திகை தீபம் தோறும் பாவை விளக்குகளை ஏற்றி வைப்போம். சற்று பெரிய விளக்குகள். கொஞ்சம் எண்ணை பிடிக்கும். அதனால் விசேஷ தினங்களில் மட்டும் ஏற்றுவது உண்டு. நவராத்திரி தினங்கள், வரலட்சுமி நோன்பு தினம் ஆகியவற்றிலும் இல்லத்தில் ஏற்றுவோம். இதை ஒரு தகவலுக்காகச் சொல்கிறேன்.

  ReplyDelete