Monday, September 16, 2013

வாடியம்மா!


சுப்பு தாத்தாவும் மீனாட்சி பாட்டியும் புன்னாக வராளியில் பாடி அசத்தியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்!




மாயத் திரைக்குப் பின் இருப்பவளே, என்றன்
மனசுக் குள்ளே வந்து சிரிப்பவளே
கானம் உனக்காகப் பாடி வந்தேன், நான்
காண என்றன் முன்னே வாடியம்மா!

இமய மலை தன்னில் பிறந்தவளே, அந்த
இமைய வர்கள் தொழக் கனிந்தவளே
இணையென்று எவரு மில்லாதவளே, என்றன்
துணையே என்றன் முன்னே வாடியம்மா!

ஈரேழு லகையும் ஈன்றவளே, அந்த
ஈசனின் சரிபாதி யானவளே
சேயென எங்களைக் காப்பவளே, என்றன்
தாயே என்றன் முன்னே வாடியம்மா!

செய்யப் பட்டு டுத்தி நின்றவளே, என்றன்
மனசைக் கொய்தெடுத்துச் சென்றவளே
பையப் பைந்தமிழால் பாடுகின்றேன், நான்
உய்ய என்றன் முன்னே வாடியம்மா!


--கவிநயா 

8 comments:

  1. ஈரேழு லகையும் ஈன்றவளே, அந்த
    ஈசனின் சரிபாதி யானவளே
    சேயென எங்களைக் காப்பவளே, என்றன்
    தாயே என்றன் முன்னே வாடியம்மா!

    அம்மனை
    ஆதுரத்துடன்
    அழைக்கும் பாட்டு
    அருமை..!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி அம்மா.

      Delete
  2. மனம் கவர்ந்த அருமையான பாடல் .இதனை சுப்புத் தாத்தா
    பாடி வெளியிட்டுள்ளார் மிகவும் அருமையாக இருந்தது .
    வாழ்த்துக்கள் தோழி உங்கள் முயற்சி தொடரட்டும் !!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்பாளடியாள்!

      Delete
  3. சேயென எங்களைக் காப்பவளே, என்றன்
    தாயே என்றன் முன்னே வாடியம்மா!//
    அருமையாக பாடி அழைத்து இருக்கிறீர்கள்.
    நாளும் எங்களை காத்திடு அம்மா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்மா.

      Delete
  4. பாட்டை நிதானமா வாசித்து / கேட்டு ரசித்தேன் .

    ReplyDelete