Monday, November 25, 2013

பொன்னார் மேனியன் சிவனின் உமையே! - 4


பைரவி, முகாரி இரண்டிலுமாக சுப்பு தாத்தா அருமையாகப் பாடித் தந்திருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


இருளினை நீக்கி ஒளிதரும் வடிவே
சிறுமதி யேனுக்கும் அருளிடும் உருவே
குரு வடிவாகி வந்தருள் திருவே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (13)

கருநிறம் கொண்ட காளியின் வடிவே
மருளினை நீக்கித் தெருள் தரும் உருவே
குரு வடிவாகி வந்தருள் திருவே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (14)

வறுமையை நீக்கி அருளிடும் வடிவே
பெருநிதி* யந்தனைத் தந்திடும் உருவே
குரு வடிவாகி வந்தருள் திருவே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (15)

அம்மா என்றே அழுதேன் அனையே*
அன்பால் என்றும் தொழுதேன் உனையே
கண்ணால் கொஞ்சம் பாராய் எனையே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (16)


*அனையே == அன்னையே – கவிச் சுவைக்காக மருவியது.
*பெருநிதியம் == பிறவாப் பெருநிதி


--கவிநயா

(நிறைவுற்றது)

4 comments:

  1. அருமை... சுப்பு தாத்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. "அம்மா என்றே அழுதேன் அனையே
    அன்பால் என்றும் தொழுதேன் உனையே"

    அழகான வரிகள்
    நன்றி அக்கா!

    ReplyDelete