சுப்பு தாத்தாவின் குரலில், இசையில்... நீங்களும் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!
மனதில் உன்னை நிரப்பி வைத்தேன்,
நனவில் வருவாயோ?
கனவில் கூடக் கவிதை சொன்னேன்,
காட்சி தருவாயோ?
நினைவை உனக்காய் நிறுத்தி வைத்தேன்,
நிஜமாய் வருவாயோ?
இதமாய் வந்தென் இதயம் அமர்ந்து
இன்பம் தருவாயோ?
பலப்பல காலம் பாடம் படித்தும்
புத்தியில் ஏறவில்லை
துயரம் எத்தனை அனுபவித்தாலும்
மயக்கம் தீரவில்லை
நல்லது இதுவென்று மதி சொன்னாலும்
மனமோ கேட்பதில்லை
நாளும் உனையே நினைத்திருந்தாலும்
‘நான்’ இன்னும் போகவில்லை
கோபம் தாபம் தீர்த்து விடு, மனக்
கவலைகள் தம்மைத் துரத்தி விடு
தீபத் தாயே வந் தென்றன்
இருளை இன்றே விரட்டி விடு
பாதம் பற்றிக் கொண்டு விட்டேன்
வினைகளை
எட்டி உதைத்து விடு
வாதம் ஏதும் செய்யாது
வந்தெனக் கின்பம் தந்து விடு
--கவிநயா
--கவிநயா
ஆகா...! உருக வைக்கும் வரிகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மிக்க நன்றி தனபாலன். சுப்பு தாத்தா பாடியதையும் இணைத்திருக்கிறேன். கேட்டு மகிழுங்கள்!
Deleteவணக்கம்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...
இப்போதுதான் பார்க்க முடிந்தது. மிக்க நன்றி.
Delete