Monday, December 30, 2013

புத்தாண்டு வேண்டுதல்!


சுப்பு தாத்தாவின் குரலிலும் இசையிலும் இந்த வேண்டுதலைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


நாளும் பொழுதும் நவில்வேன் அம்மா உந்தன் திருநாமம் - நவ
கோள்கள் வணங்கும் நாயகியே, பணிந்தேன் பொற்பாதம்
வேதம் பாடும் தாயுன்னை இந்தப் பேதையும் பாடுகிறேன்
பேதம் இன்றிக் காப்பவளே உன் பாதம் பற்றிக் கொண்டேன்!

நிலவாய் நீராய் நெருப்பாய் வளியாய் வெளியாய் இருப்பவளே
தலமாய் வந்தென் உள்ளம் புகுந்து நிலையாய் நிற்பவளே
மாயா மயக்கம் தந்து அதையே தீயாய் எரிப்பவளே
தாயாய் வந்து சேயாம் எம்மைக் காக்கும் தூயவளே!

உண்ணும் உணவும் பருகும் நீரும் உந்தன் அருளாலே
எண்ணும் மனமும் பண்ணும் செயலும் உந்தன் அருளாலே
சொல்லும் பொருளும் சொல்லின் புனைவும் உந்தன் அருளாலே
அல்லும் பகலும் கல்லும் கனியும் உந்தன் அருளாலே!

அம்மா உன்மேல் பண்ணும் கவியும் உந்தன் அருளாலே
எந்தன் மனதில் நீயிருப்பதுவும் உந்தன் அருளாலே
நினைவால் வாக்கால் செயலால் உன்னைத் துதிக்க அருள்வாயே
நிலையில்லாயென் புத்தியில் நீயே நிலைக்க வருவாயே!

உன்னை என்றும் மறவாத, உள்ளம் தந்திட வேண்டும்
ஒவ்வொரு நொடியும் என்நாவில் உன்நாமம் தவழ்ந்திட வேண்டும்
இன்பம் துன்பம் எல்லாமே, ஒன்றாய்க் கொண்டிட வேண்டும்
உண்மை இன்பம் நீயே என்றே இன்றே உணர்ந்திட வேண்டும்!


--கவிநயா

அனைவருக்கும் மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
அனைவருக்கும் அன்னையின் அருள் பெருகிச் சிறக்கட்டும்!



9 comments:

  1. அனைவருக்கும் மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
    அனைவருக்கும் அன்னையின் அருள் பெருகிச் சிறக்கட்டும்!

    ReplyDelete
  2. அருமை...

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கவிநயா. சமயம் கிடைத்தால் அடியேனது இந்த வலைப்பதைவை சென்று காணுங்கள்

    http://natarajar.blogspot.in/2013/12/blog-post_25.html

    ReplyDelete
    Replies
    1. Miga armai;Ellorukkum Annai Arul Kidaikattum.
      Natarajan.

      Delete
    2. நன்றி கைலாஷி. அவசியம் பார்க்கிறேன்...

      நன்றி திரு.நடராஜன்.

      Delete
  4. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா!

    அழகான புத்தாண்டு வேண்டுதலுக்கு நன்றி!

    ReplyDelete