Wednesday, December 25, 2013
அன்னையவள் அமர்ந்திருக்கும் அழகைப் பாருங்கள்!
அன்னையவள் அமர்ந்திருக்கும் அழகைப் பாருங்கள், அவள்
அதரங்களில் மலர்ந்திருக்கும் முறுவல் பாருங்கள்
அவள்புகழை அனுதினமும் பாடிப் பாருங்கள், நம்மை
அண்டிவரும் துன்பம் திரும்பி ஓடும் பாருங்கள்!
அவள் பெயரைச் சொல்லச் சொல்ல இதயம் மலர்ந்திடும், மலர்ந்த
இதயத்திலே இருக்க அவள் மனமும் விழைந்திடும்
மணம் வீசும் நாமம் அவள் மனதை மலர்த்திடும், நல்ல
குணம் தந்து நமது பிறவிப் பிணியைப் போக்கிடும்!
அவள் புகழைப் பாடும் இன்பம் ஒன்று போதுமே, நித்தம்
அவள் நினைவை நாட நாட இன்பம் கூடுமே
மிச்சமெல்லாம் துச்சமென தூர ஓடுமே, செல்லப்
பிச்சியவள் இச்சை போல உயிரும் வாழுமே!
--கவிநயா
பி.கு. முதல் முறையாக செவ்வாய் அன்று இட வேண்டியது தள்ளிப் போய் விட்டது. திங்கள் இரவு அவசர அலுவலக வேலை வந்ததில் மறந்தே விட்டது. மன்னித்துக் கொள் அம்மா :(
Subscribe to:
Post Comments (Atom)
" முதல் முறையாக செவ்வாய் அன்று இட வேண்டியது தள்ளிப் போய் விட்டது. திங்கள் இரவு அவசர அலுவலக வேலை வந்ததில் மறந்தே விட்டது."
ReplyDeleteஎனக்கும் கவலை ஆச்சு என்ன ஆச்சு இன்னைக்கு கவினயாவுக்கு என்னு
"அவள் புகழைப் பாடும் இன்பம் ஒன்று போதுமே, நித்தம்
அவள் நினைவை நாட நாட இன்பம் கூடுமே
மிச்சமெல்லாம் துச்சமென தூர ஓடுமே, செல்லப்
பிச்சியவள் இச்சை போல உயிரும் வாழுமே!"
அழகான வரிகள்
நன்றி அக்கா!
நன்றி ஷைலன்!
Delete