நீலாம்பரியில் சுப்பு தாத்தா உருகியிருப்பதை நீங்களும் கேட்டு மகிழுங்கள். மிக்க நன்றி தாத்தா!
சுப்பு தாத்தா ஷண்முகப்ரியா ராகத்தில் அனுபவித்துப் பாடியிருப்பதையும் கேட்டு மகிழுங்கள்!
மனமெல்லாம் மலர்ந்தவளே மங்கல மீனாட்சி
நினைவெல்லாம் நிறைந்தவளே தந்திடு
அருட்காட்சி!
(மனமெல்லாம்)
சொக்கனின் மனங்கவர்ந்த சுந்தரியே
சௌந்தரியே
மக்கள்தமைக் காக்கவென்றே மதுரை
வந்த மாமணியே!
(மனமெல்லாம்)
கதம்ப வனத்தினிலே குடியிருக்கும்
பூங்குயிலே
என்மன வனத்தினிலும் வாழ்ந்திருக்க
வாமயிலே
பச்சைப்பசுங் கிளியிடத்தில் கொஞ்சிப்
பேசும் பைங்கிளியே
இச்சை கொண்டேன், என்னிடமும் கொஞ்சம்
பேச வாஎழிலே!
(மனமெல்லாம்)
--கவிநயா
ecstatic fantasy ! superb lyric !!
ReplyDeletesoon I shall sing in Raag kanada.
subbu thatha
ஆஹா, மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தாத்தா!
Delete// என்மன வனத்தினிலும் வாழ்ந்திருக்க வாமயிலே //
ReplyDeleteஅருமை... வாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன்!
Deleteஆஹா.. மீனாட்சி பாட்டு.. நன்றி!!
ReplyDeleteநான் சொல்லும் முன் நீங்களே வந்ததில் மிக்க மகிழ்ச்சி. அழைத்து வந்த மீனாளுக்கு நன்றி!
Delete