Monday, March 17, 2014

எந்நிறம்? எக்குணம்? எவ்விடம்? எவ்வடிவம்?


பச்சை நிறமாய் இருப்பாள்
நீல நிறமாய்ச் சிரிப்பாள்
அந்தி வான நிறத்தினிலே
அங்கம் மின்ன ஜொலித்திருப்பாள்!

தாமரை மலரிருப்பாள்
அலைகடலில் முகிழ்ப்பாள்
மலைமகளாய்ப் பிறப்பாள்
பாலையென வடிவெடுப்பாள்!

வேத வடிவாயிருப்பாள்
நாத வடிவாயிருப்பாள்
மாய வடிவாயிருப்பாள்
ஞான வடிவாயிருப்பாள்!

இருள்நிறக் காளியவள்
அருள்பொழி மாரியவள்
அசுரரை அழிக்கும் அவள்
அன்பு மிகு அன்னை யவள்!


--கவிநயா

4 comments:

  1. அழகான அருமையான அன்பு மிகு வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. raag bhahudari here
    what a Divine song this one !!
    https://soundcloud.com/meenasury/pachainiramay-iruppal
    i am setting this in raag dhanyasi also.
    subbu thatha.

    ReplyDelete
    Replies
    1. கேட்டு மகிழ்ந்தேன் தாத்தா! என் மனதில் தோன்றிய மெட்டிலேயே இருக்கிறது :) மிக்க நன்றி.

      Delete