சுப்பு தாத்தா மணிரங் ராகத்தில் மணி மணியாய்ப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!
அன்னையின் அழகுக்கு நிகரேது? அவள்
கருணையின் பொழிவிற்கு அளவேது?
(அன்னையின்)
இடையினில் மேகலை கிணுகிணுக்க,
முகம்
முழுமதி எழிலினை விஞ்சி நிற்க
பாசாங்குசம் கரங்கள் தாங்கி நிற்க,
கரும்பு
வில்லுடன் மலரம்பும் ஏந்தி நிற்க,
என்
(அன்னையின்)
மாயா விளையாட்டில் மகிழுபவள்,
அவளே
தாயாய் உடனிருந்து அருளுபவள்
மேயா மனதினிலே உறையுமவள், ஆங்கே
தேயா நிலவாக ஒளிருபவள், என்
(அன்னையின்)
--கவிநயா
அழகுடன் அருமையான வரிகள்...
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன்!
Delete