Monday, April 7, 2014

நீ இலாத போது...



பின்னூட்டச் சுட்டியைத் தவிர, சுப்பு தாத்தா மற்றுமொரு ராகத்திலும் உருகிப் பாடியிருப்பதையும் கேளுங்கள்... மிக்க நன்றி தாத்தா!



நீ இலாத போது,
என் நினைவு எங்கு வாழும்?
நிழலைத் தேடி வாடி உந்தன்
அடிகள் நாடி ஓடும்
(நீ இலாத)

வானும் மண்ணும் போற்றும் அன்புக் கன்னி நீயன்றோ?
சூழும் துன்பம் ஓட்டும் எந்தன் அன்புத் தாயன்றோ?
(நீ இலாத)

வேதனையில் வேகும் போது சந்தனமாய் வருவாய்
சோதனைகள் தாங்க உந்தன் தோளிணைகள் தருவாய்
நாகம் சூடும் நாதனுடன் நாயகியே வருவாய்
பாதம் சூட ஏங்குகிறேன் பைங்கிளியே அருள்வாய்
(நீ இலாத)


--கவிநயா

6 comments:

  1. உருக வைக்கும் பாடல்...

    அன்னை அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்.

      Delete
  2. Listen to this Great song in Hamsa Nandhi ?
    https://soundcloud.com/meenasury/kvudmyjk7xny
    subbu thatha

    ReplyDelete
    Replies
    1. இரண்டு ராகங்களிலுமே அருமை தாத்தா... அந்த இன்னொரு ராகம் இன்னும் கொஞ்சம் கூடவே பிடித்திருந்தது :) மிகவும் நன்றி!

      Delete
  3. With charity, money is purified. By service, our actions are purified. With music, our emotions are purified and with knowledge our intellect is purified. - Sri Sri Ravi Shankar

    ReplyDelete
    Replies
    1. அழகான, அர்த்தமுள்ள வாக்கியம். பகிர்ந்தமைக்கு நன்றிகள் தாத்தா...

      Delete