Monday, April 28, 2014

எனதன்னை ஈஸ்வரி!


சுப்பு தாத்தா அஞ்சு ராகங்களில் (த்விஜவந்தி, ஸஹானா, புன்னாகவராளி, சிந்து பைரவி, யதுகுல காம்போஜி) அஞ்சாமல் பாடியிருப்பதை நீங்களும் அஞ்சாம என்ஞாய் பண்ணிக் கேளுங்க! மிக்க நன்றி தாத்தா!



சுப்பு தாத்தாவுக்கு இந்த பாட்டு ரொம்பப் பிடிச்சிருச்சாம். அதனால மறுபடியும் த்விஜவந்தி, அடானா, ஸஹானா, மற்றும் தன்யாஸி ராகங்கள்ல பாடியிருக்கார்... கேட்டு மகிழுங்கள்!  மிக்க நன்றி தாத்தா!

அகிலாண்டேஸ்வரி
அலகில்லா ஈஸ்வரி
பரமனின் ஈஸ்வரி
பதமருள் ஈஸ்வரி!

ஆனைக்காவினில்
ஆண்டிடும் ஈஸ்வரி
ஆனைமுகத்தனை
ஈன்றிட்ட ஈஸ்வரி!

கந்தனை அணைத்திட்ட
கனியமு தீஸ்வரி
பந்தங்கள் அறுத்திடும்
பனிமலை ஈஸ்வரி!

விந்தைகள் புரிந்திடும்
வித்தகி ஈஸ்வரி
எந்தையின் இடப்புறம்
அமர்ந்திட்ட ஈஸ்வரி!

எனதுள்ளம் உறைந்திடும்
எழில்மிகு ஈஸ்வரி
ஏழுலகம் போற்றும்
ஏதமில் ஈஸ்வரி!

கனிவு மிகுந்தவள்
கண்மணி ஈஸ்வரி
எனதுயிரானவள்
எனதன்னை ஈஸ்வரி!


--கவிநயா

இங்கும் அந்த பாடல் ஒலி.
எங்கும் அந்த அன்னையின் ஒளி 

No comments:

Post a Comment