Monday, April 21, 2014

அந்நாள் என்று வரும்?


அந்நாள் என்று வரும்? - அம்மா
நன்னாள் என்று வரும்?
அந்நாள் என்று வரும்? - அம்மா
நன்னாள் என்று வரும்?

உன்பெயரைஉச் சரிக்கையில் என்கண்ணில்
கண்ணீர் என்றுவரும்?
உன்னெழில் வடிவை எண்ணும்பொழுதினில்
நெஞ்சம் என்றுருகும்?

உண்மை நீயன்றி வேறொன்றிலையென
என்மனம் என்றுணரும்?
நீயேசரணென பற்றிக்கொள்ளும் உறுதி
என்றைக்கு எனக்குவரும்?

அந்நாள் என்று வரும்? - அம்மா
நன்னாள் என்று வரும்?
அந்நாள் என்று வரும்? - அம்மா
நன்னாள் என்று வரும்?


-கவிநயா

4 comments:

  1. Replies
    1. உண்மைதான்... நன்றி தனபாலன்...

      Delete
  2. உண்மை நீயன்றி வேறொன்றிலையென
    என்மனம் என்றுணரும்?
    நீயேசரணென பற்றிக்கொள்ளும் உறுதி
    என்றைக்கு எனக்குவரும்?

    எனக்கும்தான் அம்மா !
    நன்றி அக்கா!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஷைலன்... ரொம்ப நாளாச்சு பார்த்து... நலந்தானே?

      Delete