Monday, May 5, 2014

வாராயோ? தாராயோ?


சுப்பு தாத்தா வாலாஜி மற்றும் சிவரஞ்சனி ராகங்களில் அனுபவித்துப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!



காலிரண்டில் சதங்கை கொஞ்ச
வாயிதழை முறுவல் மிஞ்ச
மானிதெனத் துள்ளித் துள்ளி வாராயோ? எந்தன்
கானகத்தில் கதிரொளியைத் தாராயோ?

சின்னஞ்சிறு அடியெடுத்து
செம்பவழ இதழ் விரித்து
அன்னமென நடை நடந்து வாராயோ? எந்தன்
அன்னையே நீ அன்பை அள்ளித் தாராயோ?

மேகலையோ கிணுகிணுக்க
மேனி வண்ணம் மினுமினுக்க
அஞ்சுகமே மெல்ல மெல்ல வாராயோ? வந்து
அஞ்சலென அபயம் எனக்குத் தாராயோ?

நூபுரங்கள் சிணுங்கி வர
நூலிடையோ ஒசிந்து வர
நேரிழையே நிலம் மகிழ வாராயோ? வந்து
கார்முகிலாய் கருணை மழை தாராயோ?

கைவளைகள் கலகலக்க
கண்டவரோ வியந்திருக்க
கண்மணியே பையப் பைய வாராயோ? வந்து
கன்னத்திலே முத்தம் ஒன்று தாராயோ?


--கவிநயா



4 comments:

  1. ஆகா..!

    வரிகள் அருமை... இனிமை...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்!

      Delete
  2. மிக மிக அற்புதமாக அன்னையை வாராயோ என்றழைத்து எங்கள்
    மனதையும் வாரி எடுத்துச் சென்றுள்ளது பாடல் வரிகள் ! வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்பாளடியாள்!

      Delete