பதகமலம் பணிந்து விட்டேன் பக்திவரம் தாராய்;
பாரபட்சம் இல்லாமல் பிள்ளை முகம்
பாராய்!
காரிருளில் கலங்குகின்றேன் கைவிளக்காய்
வாராய்;
கன்னல் மொழிக் காரிகையே கவலைகளைத்
தீராய்!
சிறுமதியேன் ஆனாலும் உன் பிள்ளை
நானே;
பெரும்பிழையே செய்தாலும் பொறுக்க
வேண்டும் நீயே!
கருவிழியில் கருணைக் கடல் தேக்கி
வைத்த தாயே;
ஒரு பார்வை பார்த்தாலும் பிழைத்திடுவேன்
நானே!
பரு உடலைச் சுமந்துலகில் வாழும்
போதும் தாயே,
கருவெனவே உன் நினைவைச் சுமந்திருப்பேன்
நானே!
கரும்பினிய தமிழாலே பாடி வந்தேன்
தாயே;
செவி கொடுத்துக் கேட்டு என்னைச்
சேர்த்தணைப்பாய் நீயே!
--கவிநயா
பதகமலம் பணிந்து விட்டேன் பக்திவரம் தாராய்;
ReplyDeleteசிறுமதியேன் ஆனாலும் உன் பிள்ளை நானே;
பெரும்பிழையே செய்தாலும் பொறுக்க வேண்டும் நீயே!
பரு உடலைச் சுமந்துலகில் வாழும் போதும் தாயே,
கருவெனவே உன் நினைவைச் சுமந்திருப்பேன் நானே!
எல்லா வரிகளுமே ரெம்ம்ப அருமை அக்கா!
அழகான வரிகள்
மிக்க நன்றி ஷைலன்!
Deleteகரும்பினிய தமிழாலே பாடி வந்தேன் தாயே;
ReplyDeleteசெவி கொடுத்துக் கேட்டு என்னைச் சேர்த்தணைப்பாய் நீயே!
அருமை !அருமை !
மிக்க நன்றி அம்மா! நலந்தானே?
Delete