காமாக்ஷி!கடாக்ஷி !
மோதகப் பொன்மணியுண்டதும் காஞ்சியில்
ஆடகம் பொழிந்த காமாக்ஷி !
பாதமலர்தனில் இப்பாமலரிடும்
பேதையேனையும் நீ கடாக்ஷி!
மதனை எரித்த அரனை வரித்து
மதுரையில் மணந்த மீனாக்ஷி !
பாதமலர்தனில் இப்பாமலரிடும்
பேதையேனையும் நீ கடாக்ஷி!
அன்னபூரணியாய் அரனுக்கு அன்னமிடும்
அன்னையே!காசி விசாலாக்ஷி !
பாதமலர்தனில் இப்பாமலரிடும்
பேதையேனையும் நீ கடாக்ஷி!
காயாரோஹணருடன் நாகையிலருளும்
நாயகியே !நீலாயதாக்ஷி !
பாதமலர்தனில் இப்பாமலரிடும்
பேதையேனையும் நீ கடாக்ஷி!
நன்றி :அமரர் கணபதியின் ,"காமாக்ஷி !கடாக்ஷி !"
காமாக்ஷி, எங்களை நீயேதான் கடாக்ஷிக்கணும்... அருமை அம்மா.
ReplyDeleteசுப்பு தாத்தா பாடியதையும் ரசித்தேன். நன்றி தாத்தா!
அழகான வரிகள்
ReplyDeleteமிக்க நன்றி அம்மா!
[1] சுப்புசார் ! பல ராகங்களில் என் பாட்டைப்பாடி அசத்தியதற்கு நன்றி .
ReplyDelete[2] கவிநயா ! பாட்டை ரசித்துப் பின்னூட்டியதற்கு நன்றி .
[3] ஷைலன் ! பாட்டை வாசித்துப் பின்னூட்டியதற்கு நன்றி .