Monday, February 16, 2015

நீயே கதி!


சஹானாவில் சுப்பு தாத்தா அருமையாகப் பாடியது இங்கே... மிக்க நன்றி தாத்தா!


கதி என்று உனை அடைந்தேன் கண் பாரம்மா!
விதி என்னும் வினை மாற்றி எனைக் கா அம்மா!
(கதி)

மாயா விளையாட்டில் மகிழும் மாதவியே!
மாயம் ஏதும் அறியா மகளுக் குதவாயோ?
பாயும் நதி சூடும் பரமன் நாயகியே!
ஓயா தழைக்கின்றேன் உமையே இரங்காயோ?
(கதி)

காலன் வரும் போதும் கலையா மனம் வேண்டும்!
ஆலின் வேர்போல உறுதி அதில் வேண்டும்!
சூலம் கரமேந்தி சுந்தரியே வருவாய்!
மாலின் சோதரியே மனமிரங்கி அருள்வாய்!
(கதி)



--கவிநயா

4 comments:

  1. அன்னையின் பாடல் அருமையாக அமைந்திருக்கு கவிநயாக்கா!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவா! நன்றி...சுப்பு தாத்தா பாடியதை இணைச்சிருக்கேன்... நேரம் கிடைக்கும் போது கேளுங்க.

      Delete
  2. அருமை அருமை.

    ReplyDelete