மதியில்லா இருளாச்சு
கதிராக நீ வருவாய் அம்மா! உன்
கண்ணொளியால் வழி தருவாய் அம்மா!
நிலமெல்லாம் மண்ணாச்சு
வளமில்லாத் தரிசாச்சு
உரமாக நீ வருவாய் அம்மா!
வரமாக வளம் தருவாய் அம்மா!
நீரெல்லாம் பாழாச்சு
நிறமில்லாச் சேறாச்சு
சேற்றுள்ளே தாமரையாய் அம்மா!
வேர் விட்டு நீ மலர்வாய் அம்மா!
சிலையாக நின்றாலும்
விலையில்லா உனதன்பை
மழையாக நீ பொழிவாய் அம்மா! பெரு
மலையாகத் துணை வருவாய் அம்மா!
--கவிநயா
--கவிநயா
"நீரெல்லாம் பாழாச்சு
ReplyDeleteநிறமில்லாச் சேறாச்சு
சேற்றுள்ளே தாமரையாய் அம்மா!
வேர் விட்டு நீ மலர்வாய் அம்மா!"
அழகான வரிகள்
நன்றி அக்கா!
மிக்க நன்றி ஷைலன்!
Deleteமனம் கதம்ப வனமாச்சு
ReplyDeleteமதங்கன்மகள் வந்தாச்சு
மின்மினியாம் கதிரும் அவள்முன்னே !
கண்ணொளியால் வழிதருவாள் பெண்ணே !
நெஞ்சநிலம் நஞ்சையாச்சு
பாமலரும் பூத்தாச்சு
உன்னைக் கவியாக்கியவள் அன்னை
இன்னும் வரம் தேவையோ பெண்ணே?
நீர் புனிதநீராச்சு
நிமலகங்கை ஆறாச்சு
பூவடிகள் பதித்து வந்தாள் அன்னை !
பாமலர்கள் தூவிப்பணி பெண்ணே !
அழகான கவிப் பின்னூட்டத்துக்கு நன்றி அம்மா!
Delete//நீர் புனிதநீராச்சு
நிமலகங்கை ஆறாச்சு//
பிடித்த வரிகள்...