Thursday, April 9, 2015

சின்னச் சின்ன ஆசை !


சின்னச்  சின்ன ஆசை !


எண்ணிலாப் பிறவிகள் எடுத்தாலும் என் தாயே!
உன்னை  மறவாப்பிறவி எடுத்திட ஆசை  !


புல்லாயினும் உந்தன் பூம்பதம் படும் புல்லாய் 
        கதம்பவனந்தனிலே  முளைத்திட ஆசை !


புள்ளாயினும்  உந்தன் வேயுறு தோளமரும்
      பேறுபெற்ற  கிள்ளையாய்க் கீச்சிட ஆசை !


எண்ணிலாப் பிறவிகள் எடுத்தாலும் என் தாயே!
உன்னை  மறவாப்பிறவி எடுத்திட ஆசை  !


கல்லாயினும் உந்தன் சிலையாக உருமாறும்
    நல்வரம் பெற்றச்  சிற்பக்கல்லாக ஆசை!


சொல்லாயின் உன் துதியின் கவிநயச்சொல்லாகி
  சொல்லொணாச் சுகங்காண ஆசையோ ஆசை!


எண்ணிலாப் பிறவிகள் எடுத்தாலும் என் தாயே!
உன்னை  மறவாப்பிறவி எடுத்திட ஆசை  !
















4 comments:

  1. சின்னச் சின்ன ஆசைகள் நன்று அம்மா :) இந்தச் சின்னப் பெண்ணின் பேரைச் சொன்னீங்களோ அல்லது உண்மையான கவிநயத்தைச் சொன்னீங்களோ.... ஆனா அதைப்படிச்ச போது அற்ப சந்தோஷம் ஏற்பட்டது உண்மை. நன்றி அம்மா!

    ReplyDelete
    Replies
    1. உன் பெயரைச் செவ்வண்ணத்தில் ஹைலைட் பண்ணியது உன்னை நினைத்துதான் :)

      Delete
    2. ச்சோ ச்வீட் :) நன்றி அம்மா.

      Delete
  2. எல்லா வரிகளுமே ரெம்ப அழகான வரிகள் லலிதாஅம்மா. நான் கூட அக்கா சந்தடி சாக்கில் தான் பேரையும் சேர்த்து பாடிடங்களோ என்று நெனைச்சன்.

    ReplyDelete