Monday, May 4, 2015

அன்னையைத் துதிப்போம்




அன்னையைத் துதிப்போம் 


ஜெய ஓம் திருக்கடவூர் அபிராமி!
ஜெய ஓம் சங்கரனின்  சிவகாமி !
 ஸ்ரீசக்ர ராஜ சிம்மாஸநேச்வரி!
ஜெய ஓம் ஜெகத்ஜனனி ! ஜெகதீஸ்வரி! 



பக்தியில் பட்டர் பிதற்றிய சொல்லை
சத்தியமாக்கிட  தாயவள்  கழற்றியே
வீசிஎறிந்த செவியணி வானில் 
மாசில் முழுமதியானதை நினைப்போம் .
ஜெய ஓம் திருக்கடவூர் அபிராமி!
ஜெய ஓம் சங்கரனின்  சிவகாமி !
 ஸ்ரீசக்ர ராஜ சிம்மாஸநேச்வரி!
ஜெய ஓம் ஜெகத்ஜனனி !ஜெகதீஸ்வரி! 



தத்துவம் எதிலும் அடங்கா அத்புத 
 சத்தியம் அவளென அனுபவித்தறிவோம் .
 பக்தர்க்குத்திருவருள்   பாலித்திடும்  பரா 
  சக்தியாம் அவளை சரணடைந்திடுவோம் .



ஜெய ஓம் திருக்கடவூர் அபிராமி!
ஜெய ஓம் சங்கரனின்  சிவகாமி !
 ஸ்ரீசக்ர ராஜ சிம்மாஸநேச்வரி!
ஜெய ஓம் ஜெகத்ஜனனி !ஜெகதீஸ்வரி! 

அன்னையின் பொன்னடி அனுதினம் பணிவோம்;
இன்னலும்  இன்பமயமாவதை  உணர்வோம்
தூயமனத்தால்  தாயினைத்தொழுவோம்
தீயுமே தென்றலாய் வீசுவதுணர்வோம்.
ஜெய ஓம் திருக்கடவூர் அபிராமி!
ஜெய ஓம் சங்கரனின்  சிவகாமி !
 ஸ்ரீசக்ர ராஜ சிம்மாஸநேச்வரி!
ஜெய ஓம் ஜெகத்ஜனனி !ஜெகதீஸ்வரி! 

1 comment:

  1. //அன்னையின் பொன்னடி அனுதினம் பணிவோம்;
    இன்னலும் இன்பமயமாவதை உணர்வோம்
    தூயமனத்தால் தாயினைத்தொழுவோம்
    தீயுமே தென்றலாய் வீசுவதுணர்வோம்.//

    அழகான வரிகள் அம்மா!
    இரண்டு செவ்வாய்க்கும் பதிவிட்டமைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete